இவருக்கு ஆப்ரேஷன் முடிந்தது….! எப்போ வேணாலும் நான் போட்டியில் விளையாடுவேன்…!! ரசிகர்கள் ஒரே குஷி..!!!

இவருக்கு ஆப்ரேஷன் முடிந்தது….! எப்போ வேணாலும் நான் போட்டியில் விளையாடுவேன்…!! ரசிகர்கள் ஒரே குஷி..!!!

மக்களே நீங்க ஆவலோடு…!! எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் திருவிழா நாளை மாலை முதல் ஆரம்பிக்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக உள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் ரசிகர்களின் ஆதரவை பெற்று 13ஆண்டுகள் சிறப்பான முறையில் நடைபெற்று இப்பொழுது 14வது சீசன் தொடரில் அடியெடுத்து வைக்கிறது ஐபிஎல் 2021.

முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோத உள்ளன. இரு அணிகளும் நல்ல ஒரு வலுவான அணி என்பதால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இல்லை.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் , டி-20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. மூன்று விதமான போட்டிகளில் இந்திய அணி தான் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இறுதியாக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பீலடிங் செய்யும்போது இந்திய அணியின் இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் கீழே விழுந்தார். சாதாரணமான காயம் என்று பார்த்தால் அவரின் தோள்பட்டையில் பலமாக அடிப்பட்டுவிட்டது.

அதனால் அந்த போட்டியில் இருந்து வெளியேறிய அவர் மீதமுள்ள இரு ஒருநாள் போட்டியிலும் விளையாட வில்லை. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் , அப்படி செய்தால் நிச்சியமாக 3 மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.

அதன்படி நேற்று நடந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ரசிகர்களின் அன்புக்கு மிக்க நன்றி. நான் எப்போ வேணாலும் போட்டியில் விளையாடுவேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அவருக்கு அடிப்பட்டதால் இளம் வீரரான ரிஷாப் பண்ட் டெல்லி கேப்டன் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் கூறியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முதல் போட்டி நாளை இரவு 7:30 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.