இந்திய அணிக்கு ஆதரவாக மாறிய பாகிஸ்தான் வீரர் ; சிறப்பான சம்பவம் தான் ; அதிரடியாக பேட்டிங் செய்த இந்திய அணி ;

0

ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகின்றனர்.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதிலும் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவின் பார்ட்னெர்ஷிப் வெறித்தனமாக இருந்தது. அதிலும் பவர் ப்ளேவில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.

பின்பு ஹர்டிக் பாண்டிய மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். ஆனால் சிறப்பாகி விளையாடிய விராட்கோலி அரைசதம் அடித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 181 ரன்களை அடித்தனர்.

அதில் கே.எல்.ராகுல் 28, ரோஹித் சர்மா 28, விராட்கோலி 60, சூரியகுமார் யாதவ் 13, ரிஷாப் பண்ட் 14, ஹர்டிக் பாண்டிய 0, தீபக் ஹூடா 16, ரவி பிஷானி 8* ரன்களை அடித்துள்ளனர். இதற்கு முன்பு ஆசிய கோப்பாய் தொடங்கிய போது இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய.

அப்பொழுது பாகிஸ்தான் அணியின் பவுலரான நசீம் ஷா சிறப்பாக பவுலிங் செய்து 27 ரன்களை மட்டுமே கொடுத்து 2 முக்கியமான விக்கெட்டையும் கைப்பற்றினார். அதில் கே.எல்.ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற விக்கெட்டை கைப்பற்றினார். அதனால் இந்திய அணிக்கு முதல் போட்டியில் பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால் இன்றைய போட்டியில் நசீம் பவுலிங் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது தான் உண்மை. ஏனென்றால் 4 ஓவர் பவுலிங் செய்த நசீம் ரன்களை வாரிவழங்கினார். அதுமட்டுமின்றி தொடக்க வீரர்களான ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நசீம் பவுலிங்கை சரியாக பயன்படுத்தி ரன்களை அடித்து தொம்சம் செய்தார்.

4 ஓவர் பவுலிங் செய்து 45 ரன்களை கொடுத்துள்ளார். அதாவது ஒரு ஓவருக்கு 11 ரன்கள் என்ற கணக்கில் கொடுத்து, இறுதி நேரத்தில் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இப்பொழுது 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது பாகிஸ்தான் அணி.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here