ஆசிய கோப்பைக்கான போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் அணிகளின் விவரம் :
ஆசிய கோப்பையில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதில் இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகள் உறுதியாகியுள்ளது. அதனை தவிர்த்து 6வது இடத்தில் இடம்பெற (ஹாங் காங், சிங்கப்பூர், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்) போன்ற நாடுகளுக்கு இடையே தகுதி சுற்றுகள் நடைபெற உள்ளது.
அதில் தேர்வாகும் அணிதான் ஆசிய கோப்பையில் பங்கேற்க முடியும். இந்த முறை ஆசிய கோப்பை இலங்கையில் தான் நடைபெற வேண்டியது. ஆனால் அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக வீரர்களின் பாதுகாப்பு கருதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்திய மற்றும் பாகிஸ்தான் மோதல் ; ஆசிய கோப்பை :
எப்பொழுதும் இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருப்பது தான் உண்மை. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை டி-20 லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை பெற்றது.
அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியது. அதில் பாகிஸ்தான் வீரரான ஷாஹீன் அப்ரிடி இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்கள் (ரோஹித் சர்மா, விராட்கோலி மற்றும் கே.எல்.ராகுல்) போன்றவர்களின் விக்கெட்டை கைப்பற்றினார்.
அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெட்றயை கைப்பற்றினார்கள். பாகிஸ்தான் பவுலரான ஷாஹீன் அப்ரிடி-க்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கூறியுள்ள நிலையில் அவரால் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லையென்றும் கூறியுள்ளனர்.
அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றியை கைப்பற்ற சாதகமாக இருக்குமா ? வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆசிய கோப்பைக்கான இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். அதில் இந்திய அணி வெற்றி பெறுமா ? இல்லையா ?