கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது ஆசிய கோப்பை 2022. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதனால் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
டாஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் பேட்டிங் :
நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 129 ரன்களை அடித்தனர்.
அதில், சாசாய் 21, குர்பஸ் 17, சட்ரன் 35, ஜெனட் 15, நஜிபுல்லாஹ் 10, அஸ்மதுல்லாஹ் 10, ரஷீத் கான் 18 ரன்களை அடித்துள்ளனர். இது குறைவான ரன்கள் என்பதால் பாகிஸ்தான் அணி சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்று தான் அனைவரும் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை.
இலக்கு மற்றும் பாகிஸ்தான் பேட்டிங் :
பின்பு 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. ஆனால் இந்த முறை பாகிஸ்தான் வீரர்களுக்கு சரியாக தொடக்க ஆட்டம் அமையவில்லை. பார்ட்னெர்ஷிப் அமையாமல் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தனர்.
இருப்பினும் இறுதி ஓவர் வரை விளையாடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 131 ரன்களை அடித்து 1 விக்கெட் மீதமுள்ள நிலையில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான். அதனால் இறுதி போட்டியிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் மோத உள்ளனர்.
நேற்று நடந்த அதிர்ச்சி சம்பவம் :
இந்த உலகத்தில் அதிக ரசிகர்களை கவர்ந்த போட்டியாக கால்பந்து போட்டிகள் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கிரிக்கெட் போட்டி தான் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எப்பொழுதும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அவ்வப்போது சண்டை நடைபெறுவது வழக்கம் தான் .
ஆனால் இப்பொழுது இந்த இரு (இந்திய, பாகிஸ்தான்) அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் சண்டை இல்லாமல் விளையாடி வருகின்றனர். இருப்பினும் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரரான ஆசிப் அலி செய்த விஷயம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரியாக 18.5 ஓவரில் பாரீட் அஹமத் பந்து வீசியதை பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி எதிர்கொண்டார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஜெனட் அதனை கேட்ச் செய்ததால் விக்கெட்டை இழந்தார் ஆசிப். அப்பொழுது கோவமான ஆசிப் பேட்டிங் தூக்கி அடிக்க சென்றார். அதன்வீடியோ இப்பொழுது இணையத்தில் பரவி வருகிறது. ஆசிப் அலியை உடனடியாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தடை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….!
#PakvAfg
Ban Asif ali for this. #PAKvAFG pic.twitter.com/AO2t6H7wzh— 𝐀𝐫𝐣𝐮𝐧 𝐕𝐞𝐫𝐦𝐚 (@ArjunVerma01) September 7, 2022