இந்திய கிரிக்கெட் அணியை வென்றால் நான் ஜிம்பாபே அணி வீரரை திருமணம் செய்து கொள்கிறேன் ; நடிகை ஓபன் டாக் ;

0

உலகக்கோப்பை போட்டிகள் : கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை 36 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்னும் 6 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. அதன்பின்னர் அரையிறுதி சுற்றுகள் நடைபெற உள்ளதால் இனிவரும் போட்டிகள் நிச்சியமாக சுவாரஷியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னிலையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி :

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை போட்டியில் மோசமான நிலையில் வெளியேறியதில் இருந்து சமீப காலமாகவே இந்திய அணியின் பேட்டிங் வெறித்தனமாக மாறிருக்கிறது என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த சீரியஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடியுள்ளது இந்திய அணி.

ஆனால் உலகக்கோப்பை, ஆசிய போன்ற பல நாடுகள் பங்களிக்கும் போட்டியில் மட்டும் இந்திய அணியின் பங்களிப்பு மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு ஐசிசி டி-20 2022 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் பங்களிப்பு அருமையாக இருக்கிறது.

ஆமாம், குரூப் 2-வை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் மூன்று போட்டியில் வென்ற நிலையில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது இந்திய. நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டியில் கிரேக் இர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் விளையாட உள்ளனர்.

அதிலும் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் நிச்சியமாக இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஜிம்பாபே, நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி சுலபமாக வென்று விடும் என்பதில் சந்தேகமில்லை.

பாகிஸ்தான் நடிகை உறுதி :

நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டியில் ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணியை ஜிம்பாபே அணி வீழ்த்திவிட்டால் நிச்சியமாக நான் ஜிம்பாபே அணியில் இருக்கும் ஒரு வீரரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதியாக கூறியுள்ளார் பாகிஸ்தான் நடிகையான சேகர் ஷின்வரி.

எப்பொழுதும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பல பிரச்சனைகள் நடைபெறும். ஆனால் நடிகை சொன்ன பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியை விழ்த்துமா ? ஜிம்பாபே கிரிக்கெட் அணி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here