வீடியோ : பா..! இப்படியெல்லாம் CATCH பிடித்தால் எப்படி ? வாயடைத்து போன ரோஹித் சர்மா ;

0

விஷக்கப்பட்னம் : இன்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கியுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதின.

இதுவரை நடந்து முடிந்த முதல் போட்டியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான ஸ்டீவன் ஸ்மித் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

சரியாக முடிவு செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு பேட்டிங் மோசமான நிலையில் அமைந்துள்ளது. ஆமாம், தொடக்க வீரரான சுப்மன் கில் எந்த ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்தார்.

அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின்னர் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

12 ஓவர் முடிந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட்டை இழந்து வெறும் 64 ரன்களை மட்டுமே அடித்துள்ளது இந்திய. இப்பொழுது விராட்கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஹர்டிக் பாண்டிய விக்கெட்டை கைப்பற்றிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. 9.2 ஓவரில் அபாட் வீசிய பந்தை எதிர்கொண்டார் இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ஹர்டிக் பாண்டிய.

அப்பொழுது எதிர்பாராத விதமாக பால் பேட்டின் எட்ஜ்-ல் பட்டு சென்று. அப்பொழுது துல்லியமாக கணித்து பறந்து பிடித்தார் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here