இவரை பற்றி மக்கள் தவறாக நினைத்து கொண்டு இருக்கின்றனர் ; இவரை பற்றி பேசியே ஆகவேண்டும் ; கவாஸ்கர் ஓபன் டாக் ;

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று காலை 9:30 மணியளவில் தொடங்கியது. இந்த போட்டி மொஹாலி-யில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதல் நாள் முடிவில் 357 ரன்கள் அடித்த நிலையில் 6 விக்கெட்டை கைப்பற்றியது இந்திய அணி. பின்னர் இன்று விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ்- முடிவில் 8 விக்கெட்டை இழந்து 574 ரன்களை அடித்துள்ளனர். இந்நிலையில் இலங்கை அணி இதனை எதிர்கொள்ள பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அதில் இலங்கை அணி முதல் இரு விக்கெட்டை இழந்துள்ளது. இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலியை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

விராட்கோலி பற்றி பேசிய கவாஸ்கர் கூறுகையில் ; இப்பொழுது அணியில் இருக்கும் அனைத்து 11 வீரர்களும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது மிகவும் கடினம் தான். கடந்த 2008 – 2009 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியை விட ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் தான் அதிகமாக விளையாடினோம்.

“ஒரு வீரர் கிரிக்கெட் பற்றி புரிந்து கொண்டு முழுமையாக விளையாட வேண்டுமென்றால் அவர் முதலில் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். விராட்கோலி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விதம், அவர் டெஸ்ட் போட்டிக்கு கொடுத்த முக்கிய துவம் தான் இப்பொழுது கிரிக்கெட் உலகத்தில் டெஸ்ட் போட்டி எவ்வளவு முக்கியம் என்பது தெரியவந்துள்ளது.” கவாஸ்கர்

“ஆனால் வெளியே இருக்கும் மக்கள் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தாமல் விளையாடி வருகிறார் என்று குறி வருகின்றனர். ஆனால் அது தவறு ஏனென்றால் இப்பொழுதெல்லாம் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் அற்புதமாக விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி” கவாஸ்கர்.

இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய தோனி மற்றும் விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான விளையாட்டை மிகப்பெரிய அளவில் மக்களிடம் காண்பித்துள்ளார். அனைவருக்கும் நன்கு தெரியும் ஒரு வீரர் எப்படி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிகிறாரோ அதனை வைத்துதான் அவருக்கான மதிப்பு என்பது இருக்கும். ஒருவேளை பேட்ஸ்மேன் ரன்களை அடிக்கவில்லை என்றால் அல்லது பவுலர் விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றால் அது உங்களுக்கான போட்டி இல்லை என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது விராட்கோலி தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1 – 2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற முடியாமல் தோல்வியை பெற்றது.

அதனை தொடர்ந்து விராட்கோலி தான் டெஸ்ட் போட்டிகளிலும் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே அறிவித்தார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.