இன்றைய போட்டியில் சிஎஸ்கே வீரர்களின் பட்டியல் இதோ….! ரசிகர்கள் மகிழ்ச்சி…. !!

ஐபிஎல் t20 லீக் ஆட்டத்தில் 34 போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளது. இந்த போட்டி துபாயில் உள்ள ஷார்ஜா மைத்தனத்தில் நடைபெற உள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வீரர்கள் யார் யார் இருப்பார்கள் என்ற கேள்வியும் எதிரிப்பார்ப்பும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இவர்களாக இருக்கலாம்!!

ஓப்பனிங் பேட்ஸ்மேன்;

சாம் குரான் மற்றும் டு ப்ளஸிஸ் ,கடந்த சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் எதிரான போட்டியில் வெளுத்து வாங்கிய சாம் குரான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்க அதிகம் வாய்ப்புள்ளது. கடந்த ஆட்டம் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் அவுட் ஆனார் டு ப்ளஸிஸ். அதனால் அதற்கு முந்தைய ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் இவர்கள் தான் ஒப்பெனிங் செய்ய அதிகம் வாய்ப்புள்ளது.

மிடில் ஆர்டர் பேட்டிங்;;

வாட்சன் , ராயுடு , தோனி ஆகிய மூவரும் மிடில் ஆர்டரில் களம் இறங்கும் பேட்ஸ்மேன்கள். இதுவரை ஆடிய ஆட்டத்தில் வாட்சன் விக்கெட் பறிபோனால் அம்பதி ராயுடு அந்த நேரத்தில் ஒரு சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தியுள்ளார். கேப்டன் தோனி சிஎஸ்கே அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல நல்ல ஒரு அதிரடி ஆட்டத்தை காட்டியுள்ளார்.

ஆல் ரவுண்டர் ;;

ஜடேஜா மற்றும் பிராவோ… இவர் இருவரும் இதுவரை விளையாடிய ஆட்டங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துள்ளார். அதுமட்டுமின்றி இறுதியாக சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட போது 10 பந்தில் 25 ரன்களை எடுத்துள்ளார் ஜடேஜா. அதுமட்டுமின்றி பிராவோ சிறப்பாக பௌலிங் திறனை வெளிப்படுத்தி இறுதி ஓவரில் நல்ல ஒரு பந்து வீச்சாளர் என்று நிரூபித்துள்ளார்.

பௌலிங் ஆர்டர் ;;

தாகூர் , பியூஸ் சாவ்லா , கரண் சர்மா , தீபக் சஹர். இந்த பந்து வீச்சாளர்கள் தான் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஆட அதிகம் வாய்ப்புள்ளது. ஏனென்றால் தாகூர் 2 ஓவரில் வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். கரண் சர்மா அதிக ரன்களை கொடுத்தாலும் முக்கியமான விக்கெட் கேன் வில்லியம்ஸ் ஆட்டம் இழக்க செய்தார். ஒரு வேளை அது தவறி இருந்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்திருக்கும்.

கடந்த டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.