ஏன் சிஎஸ்கே வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை… மனம் திறந்த தோனி … காரணம் இதுதான்!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல போட்டிகளில் பல மாற்றங்களுடன் களம் இறங்கினாலும் தோல்வியை தான் சந்தித்து வருகிறது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் 2020யில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டியில் தோல்வியையும் 3 போட்டியில் வெற்றியையும் கைப்பற்றியுள்ளது. தொடர் தோல்விக்கு கேதர் ஜாதவ் தான் காரணம் என்று பல கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சர்களும் கூறி வந்தனர். அதனால் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக ஜெகதீசன் என்ற இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைத்தது.
முதல் முதலில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஜெகதீசன் 33 ரன்களை எடுத்துள்ளார். அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதனை கவனித்த சென்னை அணியின் கேப்டன் தோனி இனிவரும் போட்டிகளில் கண்டிப்பாக அதிரடியான ஆட்டத்தை தொடங்க வேண்டும் என்று கூறினார். அதன்விளைவாக கடைசியாக சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் சாம் குரான் தொடக்க வீரராக களம் இறங்கி 21 பந்தில் 31 ரன்களை அதிரடியாக அடித்தார் சாம்.
ஏன் சிஎஸ்கே வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை… மனம் திறந்த தோனி … காரணம் இதுதான்!!
இதற்கு பதிலளித்த தோனி..;; தொடக்க வீரராக சாம் குரான் களம் இறங்கினால் ஜெகதீசன் 7வது இடத்தில் தான் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் அவ்வாறு செய்வது அணிக்கு எந்த பயனும் இல்லை அதனால் தான் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி.