டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இதை செய்தே ஆக வேண்டும் ; பிசிசிஐ-க்கு ராகுல் டிராவிட் கோரிக்கை ; இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலைமையா ?

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

அதற்கிடையில் இப்பொழுது பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மூன்று டி-20 போட்டிக்கான தொடரில் விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளனர்.

முதல் டி-20 போட்டியின் சுருக்கம் :

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணியின் கேப்டன் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்தனர். இருப்பினும் கே.எல்.ராகுல், ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் ரன்கள் குவிந்தன.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 208 ரன்களை விளாசியது இந்திய. அதனால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்ததாக தான் அனைவரும் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால், இந்திய அணியின் மோசமான பந்து வீச்சு தான் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியது.

அதிலும் முன்னணி பவுலர் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் அதிகமாக ரன்களை கொடுத்துள்ளனர். அதனால் 19.2 ஓவர் முடிவில் 211 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இதே நிலைமை உலகக்கோப்பை போட்டியிலும் தொடர்ந்தால் நிச்சியமாக இந்த ஆண்டும் உலகக்கோப்பை போட்டியில் மோசமான நிலையில் இந்திய அணி வெளியேறுவது உறுதிதான்.

ஏனென்றால் கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் மோசமான நிலையில் அரையிறுதி போட்டிக்கு கூட தகுதி பெறாத நிலையில் வெளியேறியது இந்திய என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-ன் திட்டம்:

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. ஏனென்றால் உலகக்கோப்பை 2022 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் அணியின் மோசமான நிலைமையை புரிந்த கொண்ட ராகுல் டிராவிட் சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார்.

டி-20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் முன்பு அதிகமான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டுமென்று ராகுல் டிராவிட் பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங் நம்பிக்கை கொடுத்தாலும், பவுலிங் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் ஆசிய கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here