இந்திய அணிக்கு திரும்பிய முன்னணி வீரர் ; இரண்டாவது போட்டியில் நடக்கப்போகும் முக்கியமான மாற்றம் இதுதான் ; வெற்றி வாய்ப்பு அதிகம் தான் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா : நேற்று முன்தினம் முதல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மூன்று டி-20 போட்டிக்கான தொடரில் விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளனர்.

முதல் போட்டியில் நடைபெற்ற மோசமான சம்பவம் :
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலியின் ஆட்டம் மோசமான நிலையில் இருந்தது. இருப்பினும் 20 ஓவர் முடிவில் 208 ரன்களை அடித்துள்ளனர் இந்திய வீரர்கள்.

பின்பு 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி. தொடக்கத்தில் இருந்து சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர் முடிவில் 211ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தும் பவுலிங் மோசமாக இருந்த காரணத்தால் தோல்வி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி.

முன்னணி வீரர் இந்திய அணிக்கு வருகை :

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஆசிய கோப்பைக்கு முன்பு காயம் காரணமாக வெளியேறினார். அதில் இருந்து ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டிகளிலும் இடம்பெறவில்லை. அதனால் இந்திய அணிக்கு பின்னடைவாக தான் இருந்தது.

ஏனென்றால் முதல் போட்டியில் விளையாடிய புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் போன்ற பவுலர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை. ஸ்விங் கிங் என்ற அழைக்கப்பட்ட புவனேஸ்வர் குமார் கடந்த மூன்று போட்டிகளிலும் டெத் பவுலிங் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை.

இருப்பினும் புவனேஸ்வர் குமார் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இதே நிலைமை தொடர்ந்தால் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு தோல்வி மட்டும் தான் தொடரும். இருப்பினும் காயம் சரியான பிறகு பும்ரா நாளை நடைபெற உள்ள இரண்டாவது டி-20 போட்டியில் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்திய அணியின் பவுலிங் சற்று வலுவாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

அடுத்தது தீபக் சஹார், கடந்த இரு ஆண்டுகளாக இந்திய அணியின் ஆல் – ரவுண்டராக விளையாடி வருகிறார்.கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. இருப்பினும் உலகக்கோப்பை போட்டிக்கான காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார் தீபக் சஹார்.

ஆனால் முதல் போட்டியில் தீபக் சஹாருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றது சர்ச்சையாக மாறியுள்ளது. அதனால் அடுத்த போட்டியில் தீபக் சஹார் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க போகும் வீரர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் நிச்சியமாக தீபக் சஹாருக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும். அதனால் இனிவரும் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்தால் தான் அவருடைய போரம் மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது போட்டியின் உத்தேச அணியின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, அக்சர் பட்டேல், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, தீபக் சஹார் மற்றும் யுஸ்வேந்திர சஹால்