ஜடேஜாவை தக்கவைத்தது சென்னை அணி ; ஆனால் முக்கியமான வீரரை கைவிட்டுள்ளனர் ; ஐயோ..! இவர் இல்லையா ?

0

ஐபிஎல் : டி-20 போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டி என்றால் ஐபிஎல் டி-20 லீக் தொடர் தான். கடந்த 2008ஆம் தொடங்கிய ஐபிஎல் டி-20 லீக் தொடர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.

இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 16வது சீசன் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தகவலை வெளியிட்டுள்ளது. எந்த வீரர்கள் எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே பெரிய அளவில் எழுந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனை மகேந்திர சிங் தோனி தான் ரொம்ப ஆண்டுகளாக கேப்டனாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 முறை சாம்பியன் படத்தை பெற்றுள்ளனர்.

40 வயதான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் ஓய்வை அறிவிக்காமல் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அடுத்த கேப்டன் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட வீரர்களை தக்கவைத்து கொண்ட சென்னை அணி ஒரு சில வீரர்களை வெளியேற்றியுள்ளது.

யாரை தக்கவைத்து கொண்டனர் ?

இதுவரை வெளியான தகவலின் படி மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, மொயின் அலி, ஷிவம் துபே, தீபக் சஹார், முகேஷ் சவுத்திரி போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். எப்பொழுதும் சென்னை அணியை வயதான அணி என்று பலர் கேலி கிண்டல் செய்து வந்த நிலையில், இப்பொழுது ஒரு சில இளம் வீரர்களுக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான ப்ராவோ -வை 4.4 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால் இந்த முறை சென்னை அணியில் அவரை தக்கவைக்கப்படவில்லை என்பது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டராக திகழும் ப்ராவோ இல்லாத நிலையில் அவருடைய இடத்தை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்ல் எந்த வீரர்கள் இடம்பெற்றால் வலுவான அணியாக இருக்கும் ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here