இது சரியான நேரம் தான ? ஓய்வை அறிவிக்க என்று கேள்விக்கு தோனி அசத்தலாக பதில் கூறியுள்ளார் ;

0

இறுதி போட்டி : நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தோனி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

போட்டியின் சுருக்கம் :

முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. அதிலும் சக மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 214 ரன்களை அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக சக 54, சுப்மன் கில் 39, சாய் சுதர்சன் 96, ஹர்டிக் பாண்டிய 21* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு மழை தடையாக மாறியது. ஆமாம், தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தால் 15 ஓவரில் 171 ரன்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது சென்னை.

அதில் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவன் கான்வே சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினர். இருப்பினும் ஷிவம் துபே, ரஹானே, ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் இறுதி பந்து வரை விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 171 ரன்களை அடித்து 5 விக்கெட்டை வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது.

அதுமட்டுமின்றி, ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை போல சென்னை அணியும் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி-க்கு இதுதான் இறுதி சீசன் ஆ ?

20 கோடி ரூபாய் பரிசு தொகையை வாங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் இது நல்ல தருணம் தான ? ஓய்வை அறிவிக்க என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி ; “சரிதான், இது சரியான தருணம் தான் ஓய்வை அறிவிக்க. அதனை தான் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்”.

“இருப்பினும் நான் வருகின்ற 8 மாதங்கள் சரியான பிட்னெஸ் செய்து கொண்டு ரசிகர்களுக்காக இன்னொரு ஆண்டு நான் ஐபிஎல் தொடரில் விளையாட போகிறேன். ஆனால் வருகின்ற 7 மாதங்களில் என்னுடைய உடல் எந்த அளவிற்கு பிட்னஸ் ஆக இருக்க போகிறது என்பதை பொறுத்துதான் என்று கூறியுள்ளார் தல தோனி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here