KXIP vs SRH; டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது…! இன்றைய போட்டியில் களம் இறங்கும் வீரர்கள் விவரம் இதோ …!
ஐபிஎல் 2020: 22 வது போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாட போகின்றன. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
டாஸ்;;
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;
டாஸ் தோற்ற கே.எல்.ராகுல் ; முதலில் பேட்டிங் செய்ய தான் எதிர்பார்த்தோம் டாஸ் தோற்று விட்டதால் அந்த வாய்ப்பை தவற விட்டோம் என்றார் கே.எல்.ராகுல்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்கள்: கே.எல்.ராகுல், மாயங் அகர்வால், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரான், சிம்ரன் சிங், மேக்ஸ்வெல், முகமது ஷமி போன்ற வீரர்கள் இன்றைய போட்டியில் விளையாட போகின்றன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ;
இன்றைய போட்டியில் சண்டை ஐதராபாத் அணியில் விளையாடும் வீரர்கள்; டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கர்க், அபிஷேக் சர்மா, ரசித் கான், சந்தீப் சர்மா, நடராஜன் ஆகிய வீரர்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளப் போகிறார்கள்
இந்த ஐபிஎல் 2020 இல் ஐந்து போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் அணி, நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 5 போட்டிகள் விளையாடி உள்ளது அதில் மூன்று போட்டிகளில் தோல்வியும் இரண்டு போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.
இரு அணிகளும் ஐபிஎல் போட்டிகளில் 14 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. அதில் 10 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுள்ளது, மீதமுள்ள 4 போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றுள்ளது.