நீ இரு நான் போறேன் ..! பெருந்தன்மையாக விக்கெட்டை விட்டுக்கொடுத்த ரிஷாப் பண்ட் ;

0

கடினமாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் தோல்வி பெற்று வெளியேறியுள்ளது.

போட்டியின் சுருக்கம் :

நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல் நிதானமாக பேட்டிங் செய்ய தொடங்கினார்கள். எதிர்பார்த்தபடி கே.எல்.ராகுல் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தார்.பின்பு ரோஹித் சர்மா, ஆனால் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் கடின உழைப்பால் இந்திய சகிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 168 ரன்களை அடித்தனர்.

இதில் முதல் 15 ஓவர் முடிவில் 100 ரன்களை மட்டுமே அடித்திருத்தது இந்திய. ஆனால் இறுதியாக விளையாடிய 5 ஓவரில் 68 ரன்களை விளாசியுள்ளார் ஹர்டிக் பாண்டிய. பின்பு 169 ரன்கள் அடித்தால் இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டுமென்று உதாரணமாக விளையாடினார்கள். கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ் சிறப்பாக விளையாடிய 16 ஓவரில் 170 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்திய பேட்ஸ்மேன்களின் போராட்டம் :

இது அரையிறுதி போட்டி என்றதால் அதிரடியாக பேட்டிங் செய்து ரன்களை அடிக்கவேண்டியது அவசியம். ஆனால் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் அதனை தவறவிட்டனர். அதனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக விராட்கோலி, ஹர்டிக் பாண்டிய இருவரும் 120க்கு மேற்பட்ட ரன்களை அடித்துள்ளனர். இதற்கிடையில் ரிஷாப் பண்ட் செய்த செயல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

அப்படி என்ன செய்தார் ரிஷாப் பண்ட் ?

முடிந்தவரை ரன்களை அடிக்க வேண்டுமென்று ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய இறுதி ஓவரில் விளையாடி வந்தனர். ஆனால் அந்த நேரத்தில் ஹர்டிக் பாண்டிய வெறிபிடித்த சிங்கம் போல அனைத்து பந்துகளையும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விளாசினார். சரியாக 19.3 ஓவரில் ஜோர்டான் வீசிய பந்தை ரிஷாப் பண்ட் எதிர்கொண்டார். அப்பொழுது பந்தை மிஸ் செய்த ரிஷாப் பண்ட் தடுமாறினார். ஆனால் ஹர்டிக் பாண்டிய தீடிரென்று ஓடியதால் ரிஷாப் பண்ட் விக்கெட்டை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். ஹர்டிக் பாண்டிய பேட்டிங் செய்ய வேண்டுமென்று நினைத்த ரிஷாப் பண்ட், ரன் -அவுட் ஆனது பெரியதாக நினைத்துக்கொள்ளாமல் சைகை காட்டி வெளியேறினார்.

இந்திய அணியின் பேட்டிங் பற்றி எந்த விதமான குறையும் இல்லை. ஆனால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தவித்தது இந்திய. இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து இந்திய அணி வெளியேறியதற்கு என்ன காரணமாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here