அட கடவுளே ; நூலிழையில் உயிர் தப்பித்த ரிஷாப் பண்ட் ; நடந்தது இதுதான் ;

0

வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி முதல் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

அதற்கான அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் போட்டிக்கான அணியை ரோஹித் சர்மாவும், டி-20 போட்டிக்கான இந்திய அணியை ஹர்டிக் பாண்டியாவும் வழிநடத்த உள்ளனர். இதில் ரிஷாப் பண்ட் இடம்பெறாதது ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாகவே ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு இந்திய அணிக்கு பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்து வந்துள்ளார் ரிஷாப் பண்ட்.

விபத்தில் சிக்கிய ரிஷாப் பண்ட் :

இன்று அதிகாலையில் இந்திய வீரரான ரிஷாப் பண்ட் டெல்லியில் இருந்து ரூற்கீ சென்று கொண்டு இருக்கும்போது. இடையே அவரது கார் விபத்தில் சிக்கியது. அதில் கார் தீப்பற்றி எரிந்தது. அதில் ரிஷாப் பண்ட் -க்கு தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அதன் புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here