மூத்த வீரர்களுக்கு நோ சொன்ன பிசிசிஐ ; இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர்களின் அதிகரிப்பு ; பட்டியல் இதோ ;

சமீபத்தில் தான் பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் பங்களாதேஷ் அணியும், டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியும் வென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் மற்றும் மூன்று டி-20 போட்டிக்கான தொடரும் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

அதற்கான இந்திய கிரிக்கெட் அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் டி-20 போட்டிக்கான கேப்டனாக ஹர்டிக் பாண்டியாவும், ஒருநாள் போட்டிக்கான தொடரில் ரோஹித் ஷர்மாவை கேப்டனாகவும் அறிவித்துள்ளனர். அதுமற்றுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் வெளியேறியது.

அதனால் மூத்த வீரர்களை உடனடியாக அணியில் இருந்து வெளியேற்ற வேண்டுமென்றும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்து வருகிறது. அடுத்த டி-20 உலகக்கோப்பை 2024-ஐ மனதில் வைத்து தான் இந்திய கிரிக்கெட் அணி இனிவரும் போட்டிகளில் எதிர்கொள்ளும் என்று ஹர்டிக் பாண்டிய கூறியுள்ளார்.

அதற்கு ஏற்ப இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடரில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஹர்டிக் பாண்டிய (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாமான், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், அர்ஷதீப் சிங், ஹர்ஷல் பட்டேல், உம்ரன் மாலிக், சிவம் துபே, முகேஷ் குமார் போன்ற வீரர்களை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.