இவர் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருக்க வாய்ப்பு உள்ளது ; இளம் வீரரை பற்றி பேசிய ரோஹித் சர்மா ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20, ஒருநாள் போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளது. இதுவரை 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் போட்டிகளை வைத்துதான் உலகக்கோப்பை போட்டிக்கான அணியை தேர்வு செய்ய உள்ளனர்.

அதனால் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது இந்திய. இருப்பினும் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால் கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருந்து வெளியேறினார்கள்.

அதனால் இந்த முறை சிறப்பாக விளையாட வேண்டும் என்று பல விதமான முயற்சிகள் இந்திய அணியால் எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, புதிய கேப்டனான ரோஹித் சர்மா டி-20 போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். இதற்கிடையில், தான் இந்திய அணியில் சமீபத்தில் இடம்பெற்ற உம்ரம் மாலிக் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா ? இல்லையா ?என்று பல கேள்விகள் எழுந்தது.

ஏனென்றால் இபொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் அவர் மட்டும் தான் அதிவேகமாக பவுலிங் செய்து வருகிறார். இருப்பினும் உம்ரன் மாலிக் சில மாதங்களுக்கு முன்பு அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா ; ” நிச்சியமாக உம்ரன் மாலிக் எங்களுடைய பிளான்-ல் இருக்கிறார். இருப்பினும் அவர் இப்பொழுது தான் இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். அதனால் அவருக்கு இன்னும் அதிக போட்டிகளில் விளையாடும் அனுபவம் நிச்சயமாக தேவைப்படுகிறது.”

“ஏனென்றால் உலகக்கோப்பை போட்டிகளில் பல அணிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கும். இருப்பினும், அவரது பவுலிங் வேகமாக இருந்தாலும், அதில் ஸ்விங் செய்தால் நிச்சயமாக உம்ரன் மாலிக் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா”.

இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் புவனேஸ்வர் குமார், பும்ரா, அர்சத்தீப் சிங், தீபக் சஹார், முகமத் சிராஜ் போன்ற வீரர்கள் இருக்கும் நிலையில் உம்ரன் மாலிக்-க்கு வாய்ப்பு வழங்கப்படுமா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here