இந்தியாவின் கிரிக்கெட் அணியின் வருங்கால கேப்டன் இவர் தான் ; முன்னாள் இந்திய வீரர் அதிரடியாக கூறியுள்ளார்…!

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷாப் பண்ட் ஒரு அதிரடியான வீரர். இவரின் அசத்தலான ஆட்டம் நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை விளையாடிய ரிஷாப் பண்ட் 97 மற்றும் 89 ரன்களை மூன்றாவதஹு மாற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அடித்துள்ளார்.

அவரது ஆட்டம் இந்திய அணியின் வெற்றி முக்கியமான காரணமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி அவவரது பேட்டிங் ஸ்டைல் மிகவும் புதிதாக இருக்கும். அதுமட்டுமின்றி ரிஷாப் பண்ட் ஆட்டத்தை பார்க்கும்போது என்னை பார்ப்பது போலவும், நான் விளையாடுவது போல இருக்கிறது என்று சேவாக் கூறியுள்ளார்.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமத் அஷாருதீன் , எதிர்கால இந்திய அணியின் கேப்டன் இவர் தான் என்று கூறியுள்ளார்..! யார் அது தெரியுமா??

அவரது ட்விட்டர் பக்கத்தில் ரிஷாப் பண்ட் தான் இந்தியாவின் வருங்கால கேப்டன், கடந்த சில மாதங்களில் அவரது விளையாட்டு மிகவும் ஆர்ச்சரியமாக இருந்துள்ளது. அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அசத்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துகு எதிரான ஒருநாள் போட்டியிலும் 77+ ரன்களை எடுத்துள்ளார். வறவருங்காலத்தில் இந்திய அணியை சமாளிக்கும் திறன் இவரிடம் இருக்கும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமத் அஷாருதீன்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு தோள்பட்டையில் அடிபட்டதால் அவரால் வருகின்ற ஐபிஎல் 2021 போட்டியில் விளையாட முடியாது என்று கிடெல்ஹி அணியின் உரிமையாளர் கூறியுள்ளனர். அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு ரிஷாப் பண்ட் தான் கேப்டன் என்று டெல்லி அணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.

அதனால் இந்த ஐபிஎல் போட்டியில் ரிஷாப் எப்படி விளையாட போகிறார் என்பது வைத்துதான் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் இருக்குமா இல்லையா என்று தெரியும்…! அதுமட்டுமின்றி அவரது கேப்டன் பொறுப்பில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கோப்பையை வென்றால், நல்ல கேப்டன் மட்டுமின்றி வருங்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பாக கூட இருக்கலாம்.