வார்னரை கிண்டல் செய்த ரோஹித் சர்மா…!.. என்ன இருந்தாலும் ரோஹித் இப்படியெல்லாம் சொல்லிருக்கக்கூடாது….!!

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் 2021 தொடங்க உள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

இருந்தாலும் கடந்து ஆண்டு போல, இந்த ஆண்டும் மக்கள் யாரும் முதல் சில போட்டிகளில் மைதானத்தில் சென்று ஐபிஎல் 2021 போட்டியை பார்க்க முடியாது என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் தேதி அறிவித்தபின்னர், எல்ல அணி வீரர்களும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமான பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு ஐபிஎல் விறுவிறுப்பான முறையில் தான் இருக்கும் என்று ஐபிஎல் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

எல்ல வீரர்களும் அவரவர் அணியில் இணைந்தாலும், 7 நாட்கள் தனிமை படுத்திக்கொண்டு இருக்க வேண்டும். அதன்பின்னர் கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்ற முடிவு வந்த பிறகுதான் அவர் மற்ற வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் அந்த விதிமுறையை அனைத்து அணிகளும் பின்பற்றி வருகின்றனர்.

இன்று ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியின் கேப்டனான டேவிட் வார்னர் இந்திய வந்துள்ளார். அவர் இன்னும் 7 நாட்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார்.

அதில் ” இன்னும் 7 நாட்கள் நான் சும்மாதான் இருக்க வேண்டும், அதனால் என்ன செய்யலாம் என்று சொல்லுங்க” எனக்கு எந்த ஐடியாவும் இல்லை, உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்த சொல்லுங்க என்று சமூகவலைத்தளங்களில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதற்கு பல , ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கமெண்ட் செய்துள்ளனர். அதில் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா , நீங்க நிச்சியமாக இந்த நேரத்தில் டிக்- டாக் விடியோவை மிஸ் பண்ணுவீங்க என்று கிண்டல் செய்துள்ளார் ரோஹித் சர்மா.

ஏனென்றால் ஆஸ்திரேலியா ஆமியின் வீரர் டேவிட் வார்னர் , அவர் மற்றுமின்றி அவரது மனைவி, குழந்தைகளுடன் டிக்-டொக் செய்வது வழக்கமாக வைத்துள்ளார். இந்திய பாடலுக்கு நடனம் ஆடி விடியோவை பகிர்ந்துள்ளார் டேவிட் வார்னர்.