சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவர்கள் தான்…! ரசிகர்களின் கணிப்பு..!

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி முதலில் சில போட்டிகளில் மக்கள் யாரையும் மைதானத்தில் அனுமதி இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் வீரர்கள் எல்லாரும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு விறுவிறுப்பான போட்டிகள் இருக்கும் என்று ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் ஐபிஎல் போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் இதனை ஆண்டு யில்லாத அளவுக்கு போன வருடம் மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் இந்த முறை கோப்பை வெல்ல வேண்டும் என்று மார்ச் தொடக்கத்தில் இருந்து பயிற்சி செய்து வருகின்றனர்.

ஐபிஎல் 2021 ஏலத்தில் ராபின் உத்தப்பா, மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம், ஹரி ஷங்கர் ரெட்டி போன்ற வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் யார் என்ற குழப்பம் சிஎஸ்கே ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது….

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் அறிமுகம் ஆன ருதுராஜ் முதல் சில போட்டிகளில் சொதப்பல் ஆட்டத்தை விளையாடினாலும், அதன்பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல ஒரு புதிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற பெயரும் வாங்கியுள்ளார்.

அதனால் நிச்சியமாக ருதுராஜ் மற்றும் டுப்ளஸிஸ் தான் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்று நினைத்து கொண்டு இருந்த போது ஐபிஎல் 2021 ஐபிஎல் ஏலத்தில் பிரபலமான ஓப்பனிங் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா இடம் பெற்றுள்ளார்.

அதனால் அனுபவம் வைத்துப்பார்த்தால் டுப்ளஸிஸ் மற்றும் ராபின் உத்தப்பா தான் ஒபெநிங் செய்ய வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நிச்சியமாக ஒபெநிங் யார் என்று முடிவு செய்திருப்பார்…! ஆனால் ஆது யார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிண்ஸ்க னியின் முதல் போட்டி வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் உள்ள மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடிபட்டதால் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் என்று டெல்லி அணியின் உரிமையாளர் கூறியுள்ளனர்.