“கிரிக்கெட் உலகில் இவரப்போல தாக்குதல் ஏற்படுத்தியவர் எவரும் இல்லை” ; டி வில்லியர்ஸ் குறித்து ரோகித் சர்மா புகழாரம்!!

0

ஓய்வு முடிவை அறிவித்த டி வில்லியர்ஸ் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார் ரோகித் சர்மா.

சமகால கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ். இவர் தென்னாபிரிக்கா அணியின் கேப்டனாகவும் சிலகாலம் இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், ஐபிஎல் உட்பட பல நாடுகளில் நடைபெற்ற லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். 

இந்நிலையில், நேற்று அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர், ” எனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என எனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே நேரம் என் உடல் நலத்தில் தொடர்ந்து கவனம் செலுத்திவந்த உடற்பயிற்சி நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் என பலருக்கும் இங்கே நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். கிரிக்கெட் எனக்கு புதிய வாழ்க்கையை அமைத்து தந்திருக்கிறது. யாரும் எதிர்பாராத அளவிற்கு என்னை முன்னேற்றி உள்ளது.

பல அனுபவங்களும் வாய்ப்புகளும் இத்தனை ஆண்டுகளில் கிடைத்து வந்தன. இவை அனைத்திற்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தற்போது அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். குடும்பத்தினருடன் முழு நேரத்தை செலவழிக்க தருணத்தை பயன்படுத்திக் கொள்வேன். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் சார்ந்த பணிகளை தொடங்க உள்ளேன்.” என தெரிவித்தார்.

அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த கிரிக்கெட் வீரராக இருந்து வந்திருக்கிறார் ஏபி டி வில்லியர்ஸ். கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற அவருக்கு, முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள், இந்நாள் வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஏபி டிவில்லியர்ஸ் உடன் பெங்களூரு அணியில் பல ஆண்டுகள் பயணித்த கேப்டன் விராட் கோலி வாழ்த்தினை பகிர்ந்து கொண்டார். 

தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் ரோகித் சர்மா டிவில்லியர்ஸ் ஓய்வு பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அவரது பதிவில், “ஏபி டிவில்லியர்ஸ் போன்று கிரிக்கெட் உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு வீரரை நான் கண்டதில்லை. அவருடன் ஒன்றாக நான் விளையாடியது இல்லை என்றாலும், எதிரணியில் பலமுறை விளையாடியதை நினைத்து பெருமை அடைகிறேன். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here