சென்னையில் வந்திறங்கிய நம்ம ‘தல’ தோனி!! இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்; புகைப்படங்கள் உள்ளே!!

0

நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக சென்னையில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக தோனி இன்று சென்னை வந்திருக்கிறார்.

இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல்பாதி இந்தியாவில் நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் வீரர்களுக்கு மத்தியில் அதிகமாக இருந்ததால், காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது  பாதியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. 

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா இரு அணிகளும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கான ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. அதேபோல் 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கான சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான தேதி குறிப்பிடப்படாமல் இருந்தது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், வீரர்கள் இந்தியா வந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கோப்பையை வென்றதற்கு பாராட்டு விழா நடைபெறும்.

தோனி இல்லாமல் எந்த விழாவும் இல்லை. எதிர்பாராத வகையில், டி20 உலகக் கோப்பைக்கு சென்ற இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருந்தார். ஆகையால் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்தவுடன்  அவர் இந்தியா வராமல் துபாயிலேயே தங்கிவிட்டார். எனவே இந்த பாராட்டு விழா தள்ளிச் சென்றது.

இந்தியா திரும்பிய பிறகு வருகிற நவம்பர் 20ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் சார்பில் சமீபத்தில் கூறப்பட்டிருந்தது. கடந்த வாரம் இந்த விழாவில் பங்கேற்று வீரர்களை பாராட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் சீனிவாசன் அழைப்பு விடுத்திருந்தார். 

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்து இறங்கினார் மகேந்திர சிங் தோனி. அதன் பின்னர் நேரடியாக விழா நடக்கும் மேடைக்குச் சென்று தனது வரவை பதிவுசெய்தார். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

புகைப்படங்கள் உள்ளே ;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here