தோனிக்கு வாய்ப்பு கிடைத்தது இதனால் தான் ; தோனி இப்படியெல்லாம் செய்வார் என்று தெரியாது ; தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் ;

இந்திய மாற்றம் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

எப்பொழுது கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கும்போது போட்டியை பற்றி அல்லது சக வீரர்களை பற்றி கருத்து சொல்வது வழக்கம் தான். அதேபோல இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் அளித்த பேட்டியில் தோனியை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் “தோனிக்கு முன்பு நான் தான் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாகினேன். ஆனால் நானும் தோனியும் ஒன்றாக இந்திய அணியின் ஏ பிரிவில் விளையாடினோம். அதுதான் முதல் போட்டி நாங்க இருவரும் விளையாடுவது.”

“நான் சிறப்பாக விளையாடிய காரணத்தால் என்னை அணியில் தேர்வு செய்தனர். ஆனால் அடுத்த போட்டியில் தோனி பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து ரன்களை குவித்தார். அதனால் அவரை பற்றி அனைவரும் பேச தொடங்கினர்.”

“அவர் ஒரு ஸ்பெஷல் வீரர் என்று. அதுவும் உண்மை தான் அவர் அணியில் இடம்பெற்ற பிறகு தான் தோனியின் உலகம் ஆரம்பித்தது. பின்னர் எனக்கு பதிலாக அவரை இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்ய தொடங்கினர். அதேபோல அவரும் சிறப்பாக விளையாடினார்.”

“என்னதான் இருந்தாலும் வாய்ப்பை சரியாக பயன்படுவது மிகவும் முக்கியமான ஒன்று என்று குறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.”

மேலும் பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : “நான் எப்பொழுது இரண்டாவது பேட்டிங்-ல் ரன்களை சிறப்பாக அடிப்பேன். நானும் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க அனைத்து விதமான முயற்சிகளையும் தொடர்ந்து செய்தேன்.”

“அதேநேரத்தில் தோனியும் சிறப்பாக ரன்களை அடித்தார். அப்பொழுதே எனக்கு நன்கு தெரியும் தோனி நிச்சியமாக அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் என்று. தோனியை டாப் ஆர்டரில் விளையாட வைத்தனர்.”

“அதனால் ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார். பின்பு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்தனர், அதில் 85 ரன்களை அடித்தார். அதனால் இரவோடு இரவாக பிரபலமனார் மகேந்திர சிங் தோனி என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.”