ரோஹித் – தான் நேற்று பீல்டிங் செய்யவே இல்லையே ; அப்பறம் எதுக்கு ரோஹித் ஷர்மவுக்கு அபராதம் !! மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஐபிஎல் 2021, டி-20 போட்டி தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். நேற்று நடந்த போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி நேற்று சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 137 ரன்கள் மட்டுமே அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமைந்தாலும் , அதன்பின்னர் பேட்டிங் செய்த யாருக்கும் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதில் ரோஹிட் சர்மா அதிகபட்சமாக 44 ரன்கள் அடித்தனர்.

டி-காக் 2 ரன்கள், சூர்யா குமார் யாதவ் 24 ரன்கள், இஷான் கிஷான் 26 ரன்கள், ஹார்டிக் பாண்டிய 0 ,ஜெயந்த் யாதவ் 23 ரன்கள் அடித்துள்ளனர். பின்பு 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.1 ஓவரில் 138 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

மும்பை இந்தியன்ஸ் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியளில் 4வது இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 போட்டியில் 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங் செய்யும்போது 3வது ஓவரில் தனிப்பட்ட காரணத்தால் ரோஹிட் சர்மா மைதானத்தில் (போட்டியில்) இருந்து வெளியேறினார். அதன்பிறகு பீல்டிங் கேப்டனாக பொல்லார்ட் பெருப்பேற்றார். இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தோல்விதான் மிஞ்சியது.

இருந்தாலும் சில போட்டிகளுக்கு முன்பு தோனிக்கு ஏற்பட்ட நிலைமை இப்பொழுது ரோஹிட் சர்மா-வுக்கு அதே நிலைமை தான். எப்படி டெல்லி கேப்பிடலஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி பவுலிங்கை செய்யும்போது கொடுத்த நேரத்தை விட அதிகம் எடுத்ததால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி 12 லட்சம் அபராதம் விதித்தனர்.

அதேபோல் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் செய்யும்போது கொடுத்த நேரத்தை விட அதிகமாக எடுத்து கொண்டதால் ரோஹித் ஷர்மாவுக்கு 12லட்சம் அபாரதம் விதித்துள்ளார். அதனால் சமுகவலைத்தளங்களில் ரோஹித் சர்மா தான் 3வது ஓவரில் பீல்டிங்கில் இருந்து வெளியேறிவிட்டார், அப்புறம் ஏன் ரோஹித் சர்மா அபராதம் கட்ட வேண்டும் என்று ரோஹிட் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்