ரோஹித் ஷர்மாவுக்கு இந்த காரணத்தால் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன்ஷிப் கிடைக்காது ; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ; முழு விவரம் இதோ ;

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் கேப்டனான விராட்கோலியை பற்றி சர்ச்சை பேச்சு தினம்தோறும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

ஆமாம்… விராட்கோலி இரு தினங்களுக்கு முன்பு தான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட்கோலி. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வி தான் எழுந்துள்ளது.

டெஸ்ட் போட்டிக்கான புதிய கேப்டனை யார் என்று முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்பதை பற்றி கூறியுள்ளார்.

அதில் ” எனக்கு தெரிந்து டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக ரோஹித் சர்மா இடம்பெற வாய்ப்பு மிகவும் குறைவு தான். ஆமாம், ஏனென்றால் டெஸ்ட் போட்டியை பொறுத்த வரை அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி விளையாட வேண்டும்.

ஆனால் சமீப காலமாக ரோஹித் சர்மா பிட்னெஸ் -ல் சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு தொடை தசையில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இது தொடர்ந்து நடந்தால் அவரால் கேப்டனாக இருக்க முடியாது.

உங்களுக்கு நியாபகம் உள்ளதா ? இலங்கை கிரிக்கெட் வீரருக்கும் இதே நிலைமை தான் ஏற்பட்டது. அதாவது வேகமாக ஒரு ரன்கள் அடிக்க ஓடினால் மீண்டும் தொடை தசையில் காயம் ஏற்பட்ட அதிக வாய்ப்புள்ளது. இப்பொழுது டெஸ்ட் போட்டிக்கான கேப்டனை அறிவிக்க வேண்டிய சுழல் பிசிசிஐ-யிடம் எழுந்துள்ளது.

அதனால் யாருக்கு அதிக காயம் இல்லையோ அவர்களை தான தேர்வு செய்ய வேண்டும். ஆனால் சமீப காலமாக ரோஹித் ஷர்மாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து காயம் ஏற்பட்டுக்கொண்டே தான் வருகிறது. அதனால் ரோஹித் சர்மா சந்தேகம் தான்.

தொடர்ந்து மூன்று (டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட்) போட்டிகளில் யார் தொடர்ந்து விளையாடி வருகிறாரோ அவரை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும். விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியது, இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார் கவாஸ்கர்.