இப்படியெல்லாம் நடக்கும் தம்பி நீங்க தான் சமாளிக்க வேண்டும் ; முன்னாள் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி பேட்டி ; முழு விவரம் இதோ ;

0

இந்திய அணியின் கேப்டனை பற்றி பேசியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி பேட்டி ;

கடந்த ஆண்டு முதல் இப்பொழுது வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனை பற்றிய சர்ச்சை தொடர்ந்து நிலவிக்கொண்டே தான் வருகிறது. ஆமாம், ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 போட்டிக்கு பிறகு நான் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே அறிவித்தார். பின்னர் பிசிசிஐயின் அதிரடி முடிவால் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரை வெளியேற்றி உள்ளனர்.

அதனால் வெறும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் மட்டுமே விளையாடி வந்துள்ளார் விராட்கோலி. ஆனால் எதிர்பாராத விதமாக நேற்று முன்தினம் நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே அறிவித்தார். அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மட்டுமின்றி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து கொண்டு தான் வருகின்றனர்.

அதேபோல, தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சாகித் அப்ரிடி , விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை பற்றி பேசியுள்ளார். விராட்கோலியின் டெஸ்ட் கேப்டன் பதிவு பற்றி கூறுகையில் ; என்னுடைய பார்வையில் விராட்கோலி செய்தது சரிதான். ஆமாம், அவர் (விராட்கோலி) போதுமான அளவிற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

அதுமட்டுமின்றி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். விராட்கோலி எடுத்த முடிவு சரியானது தான். நிச்சியமாக ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாதா அளவிற்கு அழுத்தம் ஏற்படும் என்பது தான் உண்மை. அதனால் அவரால் அதிக நாட்களாக கேப்டன் பதவியில் நீடித்து கொண்டே இருக்க முடியாது. இனிவரும் போட்டிகளில் அவர் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடுவார் என்று கூறியுள்ளார் அப்ரிடி.

சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி. அதில் ஆவது இந்திய அணி தொடரை கைப்பற்றி ஆறுதல் வெற்றி பெறுமா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here