இது அவருடைய முடிவு , அவருக்கு என்ன பண்ண வேண்டும் என்று நன்கு தெரியும் ; பும்ரா ஓபன் டாக் ; முதல் முதலாக விராட்கோலியை பற்றி பும்ரா பேசியது இதுதான் ;

0

வருகின்ற 19ஆம் தேதி முதல் மூன்று தொடர் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது.

ஒருநாள் போட்டியில் கேப்டனாக கே.எல்.ராகுல் மற்றும் துணைகேப்டனாக பும்ரா இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் துணை கேப்டனான பும்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார் . அதிலும் குறிப்பாக விராட்கோலியின் கேப்டன் பதவி பற்றி ;

இதனை பற்றி கூறுகையில் ; துணை கேப்டன் பற்றி பேசிய பும்ரா, யாராக இருந்தாலும் இந்த மாதிரி கிடைக்கும் வாய்ப்பை மறக்காமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி யாராக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள், அதேபோல தான் நானும்.

நான் எந்த கேப்டன் பதவியாக இருந்தாலும், அதனை சரியாக பயன்படுத்தி அணியை முன்னேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் பும்ரா. எங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் போதுமான அளவிற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்கள். அதனால் போட்டியை எப்படி பாசிட்டிவ் ஆக மாற்ற வேண்டும் என்பது தெரியும் கூறியுள்ளார் பும்ரா.

விராட்கோலி பற்றி பேசிய பும்ரா ; அது அவருடைய முடிவு, அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். இந்திய அணியின் வீரர்கள் இடையே பிட்னெஸ் ஆக இருக்க பல முறை கற்றுக்கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒரே வழியில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார் விராட்கோலி. நான் அவருடைய கேப்டன்ஷி-யில் தான் முதல் முதலில் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார் பும்ரா.

பேட்டிங் சரியாக இல்லாத காரணத்தால் தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. அதனால் ஒருநாள் போட்டியில் ஆவது இந்திய அணி தொடரை கைப்பற்றுமா இல்லையா ???என்று பல கேள்விகள் எழுந்துள்ளன..!! என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்….!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here