அந்த மனசு தான் சார் கடவுள் ; கவலைப்படதே உன்னுடைய கிரிக்கெட் வாழ்கை சிறப்பாக இருக்கும் என்று வாழ்த்திய ருதுராஜ் ; என்ன நடந்தது ;

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டி தான் விஜய் ஹசாரே கோப்பை (ஒருநாள் போட்டிக்கான தொடர்). கடந்த நவம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்கி நிலையில் நாளை உடன் நிறைவடைய உள்ளது.

இறுதி போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா அணியும், உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ருதுராஜ் கெய்க்வாட் செய்த் சாதனை உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ஆமாம், ருதுராஜ் கடந்த சில ஆண்டுகளாவே கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐபிஎல் 2022 போட்டிக்கான சென்னை அணியில் அறிமுகம் ஆனார்.

ஆனால் அறிமுகம் ஆன ஆண்டு சற்று மோசமான நிலையில் பேட்டிங் செய்தாலும் 2021 போட்டிக்கான ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றினார் ருதுராஜ். அதுமட்டுமின்றி, அதே ஆண்டு நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி மற்றும் விஜய் ஹசாரே போன்ற பிரபலமான போட்டிகளிலும் அதிக ரன்களை விளாசினார்.

ஆனால் இந்திய அணியில் போதுமான அளவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதா ?

இல்லை. ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். இதுவரை இந்திய அணிக்காக 9 சர்வதேச டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

விஜய் ஹசாரே 2022 போட்டியில் ருதுராஜ் செய்த சாதனை :

கடந்த 28ஆம் தேதி ஆண்டு நடைபெற்ற போட்டியில் உத்தரபிரதேச அணியும், மகாராஷ்டிரா அணியும் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 330 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 220* ரன்களை அடித்திருக்கிறார். பின்பு 331 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது உத்தரபிரதேச அணி.

சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் திணறிய உத்தரபிரதேச அணி 47.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 272 ரன்களை அடித்தனர். அதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேச அணியை வீழ்த்தியது மகாராஷ்டிரா அணி. அதில் ஷிவா சிங் வீசிய ஓவரில் 7 சிக்ஸர் அடித்து உலக சாதனை படைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.

சிக்ஸர் அடித்த ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் பவுலிங் செய்த ஷிவா சிங் பற்றி விமர்சங்கள் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி, உத்தரபிரதேச அணியின் தோல்விக்கு அவர் தான் காரணம் என்று அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனை பற்றி பேசிய ருதுராஜ் ” நிச்சியமாக ஷிவா சிங்-க்கு கடினமாக தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நான் நியாபகப்படுத்த ஆசைப்படுறேன்.”

“ஸ்டுவர்ட் ப்ரோட் ஓவரில் யுவ்ராஜ் சிங் 6 சிக்ஸர் அடித்தார். ஆனால் அதன்பிறகு ஸ்டுவர்ட் பவுலிங் மிகவும் சிறப்பான ஒன்றாக மாறியது. அதேபோல தான் உங்களுக்கும், ஒவ்வொரு போட்டியில் இருந்து ஒரு சில விஷயங்களை கற்றுக்கொண்டு செல்ல வேண்டுமென்று கூறியுள்ளார் ருதுராஜ்.”