இதுவரை நடந்த (4) டி-20 போட்டியில் இந்திய அணி 2 போட்டிகளில் வென்றுள்ளது. அதேபோல இங்கிலாந்து அணியும் இரு அணிகளும் வென்றுள்ளதால் இன்றைய போட்டியில் இந்தியா அணி நிச்சியமாக வென்றி பெற்றால் மட்டுமே டி-20 சீரியஸ் கோப்பையை கைப்பற்ற முடியும்.
இதில் இந்தியா அணியில் இரு வீரர்கள் அணியில் இணைத்துள்ளனர். இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இரு வீரர்களும் இந்தியா அணியின் டி-20 இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் களம் இறங்கினார். இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரு அவரவர் முதல் போட்டியில் அரைசதம் அடித்துள்ளனர்.
ஏப்ரல் 8ஆம் தேதி ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்க உள்ளது. ஐபிஎலுக்கு பிறகு கிரிக்கெட் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை மனதில் வைத்து இந்த இருவரும் அணியில் இருக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
யார் வீரர்கள் ? எதற்கு சச்சின் அவர்களை அணியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்? கடந்த 3வது மற்றும் 4வது போட்டியில் இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் நல்ல ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளனர். அதனால் இந்த இருவரும் நிச்சியமாக உலகக்கோப்பைக்கான போட்டியில் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளனர் சச்சின்.
Read More: தோனியின் சாதனைக்கு நெருங்கும் ஆபத்து !சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள…. காரணம் இதோ..!
அதுமட்டுமின்றி இந்த இருவரும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகின்றன. அதனால் அவர்களுக்கு வெளிநாட்டு வீரர்களின் பௌலிங் பத்தி நன்கு அவர்களுக்கு புரியும். இந்த புரிதல் இருந்தால் போதும் சிறப்பான முறையில் ரன்களை எடுக்க முடியும்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அர்ச்சரின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்துள்ளார் சூரியகுமார் யாதவ் அதுமட்டுமின்றி இஷான் கிஷானும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் பௌலிங்கை சுலபமாக சமாளித்துள்ளனர். அதனால் இவர்கள் இந்தியா அணியில் இருந்தால் நல்ல ஒரு பேட்டிங் இருக்கும் என்று கூறியுள்ளார் சச்சின்.
வருகின்ற ஐபிஎல் போட்டியை வைத்து நிச்சியம் அணிகள் மாறும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஐபிஎல் 2021 நிச்சியமாக உலகக்கோப்பைக்கான ஒத்திகையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.