தோனி இருந்த அப்போ என்ன நடந்ததோ அதேதான் இப்பொழுது எனக்கு நடைபெறுகிறது ; விராட்கோலி ஓபன் டாக்;

உலக கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி முன்னிலையில் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் நடந்த முடிந்த சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமான தோல்வியை பெற்றுள்ளது இந்திய அணி.

சமீபத்தில் தான் விராட்கோலி-க்கு பதிலாக இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். ஆனால் சமீபத்தில் தான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் விராட்கோலி. இவரை தொடர்ந்து யார் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய பிறகு விராட்கோலி அளித்த பேட்டியில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனியை பற்றி கூறியுள்ளார். அதில் ” நான் இப்பொழுது வீரர் மட்டும் தான், அதனால் இந்திய அணிக்காக செய்ய வேண்டிய கடமை இன்னும் நிறைய உள்ளது.

அணியை வெல்ல வைக்க கடமையும் உள்ளது. ஒரு அணியை வழிநடத்த கேப்டனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் விராட்கோலி. மேலும் தோனியை பற்றி கூறுகையில் ; தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அவர் அணியில் விளையாடினார். அதற்கு அவர் அணி தலைவன் இல்லை என்று அர்த்தம் இல்லை.

அவர் எப்பொழுது எங்களை வழிநடத்தி கொண்டே வந்தார். அவருக்கு நன்கு தெரியும், இது ஒரு சாதாரண விஷயம் அவரை தொடர்ந்து நான் கேப்டனாக பொறுப்பேற்றது என்று கூறியுள்ளார் விராட்கோலி.

கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் ஷர்மாவை பற்றி கூறுகையில் ; சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் தான் சிறந்த லீடர்ஷிப் தகுதி அமைந்துள்ளது. அதனை புரிந்து கொள்ள சில நேரங்கள் எடுத்துக்கொள்ளும். மற்ற ஒரு வீரர் அணியை வழிநடத்த தொடங்கும் போது புதிய யோசனைகள் அறிமுகம் ஆகும்.

அது வீரர்களிடையே பல மாற்றத்தை உருவாக்கி இந்திய அணியில் விளையாட வைக்கும். ஒருவர் அனைத்து விதமான பொறுப்புகளையும் ஏற்று நடக்க வேண்டும். நான் ஒரு வீரராக தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடி உள்ளேன். அதுமட்டுமின்றி கேப்டனாகவும் பல ஆண்டுகள் இருந்துள்ளேன், ஆனால் நான் எப்பொழுதும் ஒரே மாதிரியான யோசனையில் தான் இருக்கிறேன்.

நான் ஒரு வீரராக இருந்தாலும், கேப்டனை போல தான் என்னை நான் நினைத்துக்கொள்வேன். எனக்கு என்னுடைய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விராட்கோலி.