ப்ளே – ஆஃப்-ல் இருந்து வெளியேறியது பெங்களூர் அணி ; ரசிகர்களுக்காக ஒரு பதிவு செய்துள்ளார் விராட்கோலி ; என்ன தெரியுமா ?

இந்தியின் ப்ரீமியர் லீக் டி-20 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த முடிந்த லீக் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முதல் போட்டி :

இன்று இரவு சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

பெங்களூர் அணிக்கு மோசமான ஆண்டு :

ஐபிஎல் அறிமுகம் ஆன 2008ஆம் ஆண்டில் இருந்து இதுவரை பெங்களூர் அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்று அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக விராட்கோலி கேப்டனாக இருந்த காலத்தில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

அதனை அடுத்து கடந்த இரு ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் டூப்ளஸிஸ். ஆமாம், இருப்பினும் கடந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு பெங்களூர் அணி தேர்வானது. ஆனால் இறுதி போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் கூட நுழைய முடியாத நிலையில் வெளியேறியுள்ளது பெங்களூர் அணி.

அதுமட்டுமின்றி, குஜராத் அணிக்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்தில் விராட்கோலி முதல் ஓவரில் இருந்து இறுதி ஓவர் வரை சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஆனால் அதனால் ஒரு பயனும் அணிக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் விராட்கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் 2023 போட்டிக்கான நிகழ்வை பற்றி கருத்து கூறியுள்ளார்.

அதில் “இந்த ஐபிஎல் 2023 சிறப்பாக அமைந்தது, இருப்பினும் எதிர்பாராத வகையில் நாங்கள் (பெங்களூர்) ஒரு சில இடங்களில் சரியாக விளையாடவில்லை. வருத்தமாக தான் இருக்கிறது, இருந்தாலும் நாம் நம்முடைய ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்று பதிவு செய்துள்ளார் விராட்கோலி.”

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியுமா ?? விராட்கோலி, டூப்ளஸிஸ், மேக்ஸ்வெல், சிராஜ் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இருந்தும் ஏன்? கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.