இவர் பண்ணிட்டு இருக்கின்ற கேப்டன் பதவிக்கு 10க்கு 3 மதிப்பெண் தான் கொடுக்க முடியும்…! இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வெளுத்த வாங்கிய அந்த வீரர் யார் தெரியுமா ??
ஐபிஎல் 2021 ஆரம்பித்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று நடந்த 22வது போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 171 ரன்களை விளாசியுள்ளார். அதில் விராட் கோலி 12 ரன்கள், தேவ்தத் படிக்கல் 17 ரன்கள், ராஜட் பட்டிடர் 31 ரன்கள், மேக்ஸ்வெல் 25 ரன்கள், டிவில்லியர்ஸ் 75 ரன்கள் அடித்துள்ளனர். பின்பு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
இறுதி ஓவர் இறுதி பந்து வரை போராடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை கைப்பற்றியது. அதனால் டெல்லி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதே மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதன் போட்டியை பற்றி பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சேவாக் ; ரிஷாப் பண்ட் செய்த செயலால் தான் டெல்லி கேப்பிடல் அணி தோல்வியை சந்தித்துள்ளதாக மறைமுகமாக கூறியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங் செய்யும்போது இருந்து ஓவர் வீசிய மார்கஸ் ஸ்டோனிஸ் 23 ரன்களை கொடுத்துள்ளார்.
அதனை பற்றிய பேசிய சேவாக் ; ரிஷாப் பண்ட் இப்பொழுது கேப்டன் ஆக இருக்கிறார். அதனால் எந்த நேரத்தில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். முக்கியமான பவுலர்க்கு 3 ஓவர் கொடுத்தது எப்படி சரியாக இருக்க முடியும்.
அதனால் என்ன பொறுத்த வரை 10க்கு வெறும் 3 மதிப்பெண் தான் தரமுடியும். கேப்டன் செய்கின்ற சிறிது தவறால் தோல்விக்கு பெரிய காரணமாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று கூறியுள்ளார் சேவாக். சேவாக் சொன்னது போல இறுதி ஓவர் அமித் மிஸ்ரா பந்து வீசிருந்தால் நிச்சியமாக சில ரன்கள் கட்டுப்படுத்திருக்கலாம்.
அவ்வாறு செய்திருந்தால் நிச்சியமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றியை கைப்பற்றி புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் இருந்திருக்கும். ஆனால் சில கவனக் குறைவால் அதனை தவரவிட்டார் ரிஷாப் பண்ட் .