இந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டி பல தடைகளை தாண்டி ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோரோணா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என்று பல கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஐபிஎல் போட்டி என்றாலே அது ஒரு திருவிழா போல ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. அதனால் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்த பிசிசிஐ . இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் ரசிகர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்தபடி இப்பொழுது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ஐபிஎல் 2020 போட்டியில் தடுமாறி வருகிறது. 8 போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டியில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியளில் 6 இடத்தில் உள்ளது. தொடர் தோல்விக்கு தோனி மற்றும் கேதர் ஜாதவ் தான் காரணம் என்று பலர் கேலி கிண்டல் மட்டும் விமர்சனம் செய்து வந்தனர்.
தோனிக்கு அறிவுரை கூறிய சேவாக் … அப்படி என்ன சொன்னார் …! சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ச்சி..!..
சிஎஸ்கே அணி ஒரு சிறப்பான அணி. ஆனால் பௌலிங் சிறப்பாக அமைந்தாலும் பேட்டிங் ஆடரில் மிகவும் மோசமாக தான் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இறுதியாக களம் இறங்கி ரன்களை அடிப்பதற்கு பதிலாக முன்னதாக இறங்கி நல்ல ரன்களை எடுத்தால் அணியை கண்டிப்பாக வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அதனால் இனி வரும் போட்டிகளில் இவ்வாறு செய்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பக்கம் கடினமாக தெரிய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் இந்தியா அணியின் கிரிக்கெட் வீரர் சேவாக்.