இம்ரான் தாகிர் ஏன் சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை… !! தோனி சொன்ன பதில் … !! இந்த ஆண்டு 2020 ஐபிஎல் பல தடங்களை தாண்டி ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாகவும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடம் நடந்து வருகிறது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டில் வெறும் 3 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. 5 போட்டியில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் பல ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் சென்னை அணி வீரர்களையும் கேப்டன் தோனியையும் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாமர்த்தியமாக 20 ரன்களை வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஆல் ரவுண்டர் சாம் குரான் தொடக்க வீரராக களம் இறங்கிய நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 31 ரன்களை எடுத்த சாம் குரான் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் களம் இறங்கிய வாட்சன் 42 ரன்களிலும் , ராயுடு 41ரன்களிலும், அதிரடியாக விளையாடிய தோனி 21 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
நிர்ணயக்கப்பட்ட 20 வது ஓவரில் 167 ரன்களை எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 168 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி. தொடக்க வீரரான வார்னர் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் பரிஸ்டாவ் 23 ரன்களிலும் , மனிஷ் பாண்டே 4 ரன்களிலும் , ஆட்டம் இழக்க…
சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி அவ்ளோதான் என்று நினைத்த சென்னை ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினர் கென் வில்லியம்சன் 57 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.இறுதிவரை போராடிய சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இம்ரான் தாகிர் ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வியை முன்வைத்துள்ளனர்….!!
கடந்த ஆண்டு ஐபிஎல் 2019யில் அதிக விக்கெட் எடுத்து சென்னை அணிக்கு பெருமை சேர்த்தார் இம்ரான் தாகிர். ஆனால் இந்த ஆண்டு அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த சென்னை அணியின் உரிமையாளர் ;;; அணி மொத்தமாக 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் தான் அணியில் விளையாட வைக்க முடியும். சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருக்கும் டுப்பிலேசிஸ் மற்றும் வாட்சன் மாற்றம் செய்ய முடியாது. அதுமட்டுமின்றி சாம் குரான் சென்னை அணியில் சிறப்பாக விளையாடி வருவதனால் அவரையும் மாற்றம் செய்வது கடினம். ஆனால் வரும் போட்டியும் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவர் அணியில் இடம்பெறுவர் என்று கூறியுள்ளனர்.