நீங்க செய்த காரியத்தை எப்பொழுதும் மறக்கவே முடியாது ; விராட்கோலியை பற்றி முகமது சிராஜ் இதுதான் ; முழு விவரம் இதோ ;

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார் விராட்கோலி. அதனால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் விராட்கோலி எடுத்த முடிவை பற்றி அவரவர் கருத்துக்களை தெரிவித்து கொண்டே வருகின்றனர்.

கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பித்தது இந்த பிரச்சனை. ஆமாம், அவரே நான் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்தார். பின்னர் மற்ற காரணத்தை சொல்லி ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேற்றி உள்ளனர் (பிசிசிஐ).

அதனால் வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக விளையாடி வருகிறார் விராட்கோலி. சமீபத்தில் தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடர் போட்டியில் விளையாடியது இந்திய. அதில் 2 – 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது.

டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய அணியில் தோல்வியை சந்தித்த காரணத்தால் விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய குழப்பம் எழுந்துள்ளது. இதனை பற்றி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

விராட்கோலி கேப்டன்ஷிப் பற்றி கூறுகையில் ; என்னுடைய சூப்பர் ஹீரோ விராட்கோலி, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் போதுமான அளவிற்கு மேல் எனக்கு அதிக ஆதரவு மற்றும் ஊக்குவித்துள்ளார். நீங்க என்னுடைய அண்ணன், கடந்த சில ஆண்டுகளாக என்னை நம்பியதற்கு மிகவும் நன்றி. நீங்க (விராட்கோலி) எப்பொழுதும் என்னுடைய கேப்டன் தான் என்று கூறியுள்ளார் முகமது சிராஜ்.

அதனால் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் நாளை முதல் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் தென்னாபிரிக்கா அணியும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் போட்டியில் தான் தோல்வியை பெற்றுள்ளது இந்திய. அதனால் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெல்லுமா ? இல்லலையா ?

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள Comments பக்கத்தில் பதிவு செய்யுங்கள்….!!