நானே சொல்கிறேன் ; இவங்க மூன்று பேர் இல்லையென்றால், இந்திய அணிக்கு தோல்வி தான் கிடைத்திருக்கும் ; கே.எல்.ராகுல் ஓபன் டாக்;

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷாகிப் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் முதல் டெஸ்ட் போட்டியில் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

முதல் இன்னிங்ஸ் :

முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி டார்கெட் வைக்க அனைத்து முயற்சிகளையும் செய்தனர். ஆனால் தொடக்க வீரரான சுப்மன் கில் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் 133.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 404 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக புஜாரா 90, ரிஷாப் பண்ட் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 86, ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு முதல் இன்னிங்ஸ் விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் 55.5 ஓவர் முடிவில் 150 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 254 ரன்கள் முன்னிலையில் இருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

இரண்டாவது இன்னிங்ஸ் :

பின்பு இரண்டாவது இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்கல் சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சதம் அடித்தனர். அதனால் 61.4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த இந்திய அணி 258 ரன்களை அடித்தனர். மொத்தம் 512 ரன்கள் முன்னிலையில் இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் Declare செய்தார். பின்பு விளையாடிய பங்களாதேஷ் அணி 324 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தனர்.

அதனால் 188 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்திய. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய.

போட்டி முடிந்த பிறகு பேசிய கே.எல்.ராகுல் கூறுகையில் : “ஒருநாள் போட்டிக்கான தொடர் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஏனென்றால், எங்களுக்கு எதிராக தான் மாறியுள்ளது. அதேநேரத்தில் டெஸ்ட் போட்டியில் அதற்கு ஏற்ப மாறிக்கொண்டு விளையாடிய விதம் மிகவும் சிறப்பான ஒன்று. இந்த வெற்றியை நாங்கள் பெற அதிகமான கடின உழைப்பை போட்டுள்ளோம். இந்த மைதானத்தில் முதல் மூன்று நாட்கள் ரன்களை அடிப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.”

“இரண்டாவது இன்னிங்ஸ்-ல் அவர்கள் (பங்களாதேஷ்) தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாட தொடங்கினார்கள். அதனால் எப்படியாவது விக்கெட்டை கைப்பற்ற வேண்டுமென்று தான் நினைத்தோம். இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியில் புஜாரா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய மூன்று வீரர்களும் சிறப்பாக சண்டை போட்டு ரன்களை அடித்தனர். அதுவும் இறுதியாக விளையாட கூடிய வீரர்கள் சிறப்பாக ரன்களை அடித்தது சிறப்பான விஷயம். இது போன்ற விஷயங்கள் தான் டாஸ் வென்ற பிறகு பேட்டிங்கை தேர்வு செய்ய முக்கியமான காரணமாக இருக்கும்.”

“அதேசமயத்தில் இரு இன்னிங்ஸ்-லும் இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக அமைந்தது. அதிலும் குறிப்பாக உமேஷ் யாதவ் செய்த பவுலிங் பாராட்டவேண்டிய விஷயம் தான். இதனை நாங்க பல ஆண்டுகளாக தயார் செய்து வருகிறோம். எப்படியோ, முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டோம். அதனால் எந்த கவலையும் இல்லாமல், ஓய்வு எடுக்க போகிறோம். இன்னும் இரு தினங்களுக்கு பிறகு தான் அடுத்த டெஸ்ட் போட்டியை பற்றி யோசிக்க போகிறோம் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.”

முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதற்கு முக்கியமான காரணம் என்ன ? கேப்டன் கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்த டெஸ்ட் போட்டியில் ஏதாவது இருக்கிறதா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?