உள்ளூர் போட்டிகளில் கில்லி ; ஆனால் இந்திய அணியில் ZERO ஆ ? சையத் முஸ்தாக் போட்டியில் 44 பந்தில் 73 விளாசிய பேட்ஸ்மேன் ;மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா ?

0

இந்திய கிரிக்கெட் அணி :

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டுமென்ற ஆசை நிச்சியமாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இருக்கும் கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கும் இருக்கும். ஆனால் 11 பேர் கொண்ட போட்டியில் விளையாட அதிகப்படியான வீரருக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை.

ஆனால் இப்பொழுதெல்லாம், ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள், சையத் முஸ்தாக் அலி போன்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு நிச்சியமாக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு உறுதி தான். அதிலும் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறமையான வீரருக்கு நிச்சியமாக இந்திய அணியில் அவ்வப்போது இடம் கிடைத்து கொண்டே தான் வருகிறது.

சையத் முஸ்தாக் அலி கோப்பை :

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அன்று ஆர்மபித்த சையத் முஸ்தாக் அலி கோப்பை நாளையுடன் நிறைவடைய உள்ளது. ஆமாம், நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் விதர்பா அணியும், மும்பை அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய விதர்பா அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த விதர்பா அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 164 ரன்களை அடித்தனர். அதில் அதர்வ 29, வான்கடே 34, ஜிதேஷ் சர்மா 46* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

பின்பு 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை அணி. அதில் தொடக்க வீரர்கள் சொதப்பலாக விளையாடினாலும், மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த 73 ரன்கள் தான் மும்பை அணியை வெற்றிபெற வைத்துள்ளது. 16.5 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 169 ரன்களை அடித்தனர் மும்பை.

அதனால் 5 விக்கெட்டை வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தியது மும்பை. நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் ஹிமாச்சல் பிரதேஷ் அணியும், மும்பை அணியும் இறுதி போட்டியில் விளையாட உள்ளனர்.

ஸ்ரேயாஸ் ஐயரின் பங்களிப்பு :

இந்திய கிரிக்கெட் அணியில் விராட்கோலி இல்லாத நேரத்தில் அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை சரியாக பயன்படுத்தாத ஸ்ரேயாஸ் -க்கு இப்பொழுதெல்லாம் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இடம்கிடைப்பதே இல்லை.

ஆனால் உலகக்கோப்பை போட்டிகள் நடந்து முடிந்த பிறகு இந்திய மற்றும் நியூஸிலாந்து, இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் அனைத்து விதமான போட்டிகளில் இடம்பெற்றுள்ளார். ஆனால் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்குமா ?

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றா ? இல்லையா ? ஏன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை ? என்ன காரணமாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here