ஐபிஎல்: கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஐபிஎல் போட்டியின் எதிர்பார்ப்பை மிஞ்சிய அளவுக்கு வேறு எந்த விளையாட்டும் இல்லை என்பதே உண்மை.
எல்லா வருடமும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க வேண்டிய ஐபிஎல் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்துள்ளன அதற்கு முழு காரணம் இந்த வைரஸ். நாடு முழுவதும் பரவி உள்ளதால் இந்த வருட ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடத்த வேண்டாம் என்று பல நிபுணர்கள் கூறி வந்தனர்.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது அதன் விளைவாகத்தான் இப்பொழுது ஐக்கிய அரபு நாட்டில் ஐபிஎல் ஐபிஎல் 2020 சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த வருட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரெய்னா இல்லை என்றாலும் அவருக்கு பதிலாக அம்பதி ராயுடு நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதே உண்மை. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது, அதில் அம்பத்தி ராயுடு எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. கடைசி வரை எடுத்துச் சென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்கள் 16 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவதாக டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொண்டது அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல் அணி 175 ரன்கள் எடுத்து. சென்னை அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கை வைத்தது. அதன் பின்னர் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தொடக்கத்தில் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவர்களின் ஆட்டம் கடைசிவரை பயனளிக்கவில்லை. அந்த ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.
இப்பொழுது புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இந்த தோல்வியின் காரணமாக ரசிகர்கள் ரெய்னா மீண்டும் வரவேண்டும் என்று பல ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் இந்தியா சென்றது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இன்று நான்காவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள போகிறது சென்னை சூப்பர் கிங்க்ஸ். இந்த போட்டியில் கண்டிப்பாக பிராவோ, அம்பத்தி ராயுடு மற்றும் இம்ரான் தாகிர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் ரெய்னா இடத்தை அம்பதி ராயுடு சரியாக பூர்த்தி செய்தாலே போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல ஒரு பேட்டிங் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முதல் ஒரு வாரத்தில் மூன்று போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்பொழுது ஆறு நாட்கள் கழித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள போகிறது