நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மூன்றாவது லீக் போட்டி, இன்று (ஏப்ரல் 1) மாலை 07.30 மணியளவில் லக்னோவில் உள்ள பாரத ரத்னம் ஸ்ரீ அடல் பீஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை டெல்லி கேபிட்டல்ஸ் அணி எதிர்கொண்டது.


டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்தது.
அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 73 ரன்களையும், நிக்கோலஸ் பூரான் 36 ரன்களையும், ஆயுஷ் படோனி 18 ரன்களையும், தீபக் ஹூடா 17 ரன்களையும், குருணால் பாண்டியா 15 ரன்களையும் எடுத்துள்ளனர்.


டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில், குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும், கலீல் அகமது, சேட்டான் சகாரியா தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.


கேப்டன் டேவிட் வார்னர் 56 ரன்களையும், அக்சர் படேல் 16 ரன்களையும், ரிலீ 30 ரன்களையும் எடுத்தனர். லக்னோ அணி தரப்பில் ஆவேஸ் கான், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் மட்டும் 5 விக்கெட்டுகளையும் எடுத்து வெற்றி வித்திட்டனர்.
இன்று (ஏப்ரல் 2) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெறும் நான்காவது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், இரவு 07.30 மணிக்கு நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.