நான் சொல்றேன், இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் இது ஒன்று தான் ; உடனடியாக மாற்றியே ஆக வேண்டும் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

நேற்று தாக்க மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லிட்டன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த பங்களாதேஷ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. ஆனால் சரியாக விளையாடிய பங்களாதேஸ் வீரர் மெஹிடி ஹசன் மிராஸ் சதம் அடித்து அசத்தினார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த பங்களாதேஷ் அணி 271 ரன்களை அடித்துள்ளார்.

அதில் அனாமுல் 11, லிட்டன் தாஸ் 7, ஷாண்டோ 21, ஷாகிப் 8, ரஹீம் 12, மஹ்முதுல்லாஹ் 77, மெஹிடி 100*, நசும் அகமத் 18 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் விராட்கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக பேட்டிங் செய்தனர்.

ஆனால் ரன்களை அடிக்காத நிலையில் விக்கெட்டை இழந்தனர். பின்பு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இறுதிவரை போராடிய இந்திய அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. பின்னர் கையில் அடிபட்ட நிலையில் ரோஹித் சர்மா களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா, 28 பந்தில் 50 ரன்களை விளாசினார். இறுதியாக ஓவர் மீதமுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றுள்ளது.

அதில் விராட்கோலி 5, ஷிகர் தவான் 8, ஸ்ரேயாஸ் ஐயர் 82, வாஷிங்டன் சுந்தர் 11, அக்சர் பட்டேல் 56, தீபக் சஹார் 11, ரோஹித் சர்மா 51 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள பங்களாதேஷ் அணி, ஒருநாள் போட்டிக்கான தொடரையும் வென்றுள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : “உண்மையிலும் கை மிகவும் வலியாக உள்ளது. நல்லவேளை என்னுடைய கையில் எலும்பு முறிவு ஏற்படவில்லை. அதனால் என்னால் பேட்டிங் செய்ய முடிந்தது. எப்பொழுதும் போட்டியில் தோல்வி பெற்றால் அதில் நல்ல விஷயமும் இருக்கும் கேட்ட விஷயங்களும் இருக்கும். 69 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை கைப்பற்றினோம். ஆனால் அதன்பின்னர் 270 ரன்களை அடித்தனர். இது இந்திய அணியின் பவுலர்கள் சரியாக விளையாடவில்லை என்பது தான் உண்மை.”

“மிடில் ஓவரில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இறுதியாக ஆக ஆக விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. அதனால் அணியில் சில மாற்றங்கள் மற்றும் தவறுகளை சரி செய்ய வேண்டும். உண்மையிலும் மெஹிடி மற்றும் மஹாமுதுல்லாஹ் பார்ட்னெர்ஷிப் மிகவும் சிறப்பாக அமைந்தது. ஒருநாள் போட்டி என்றால் பார்ட்னெர்ஷிப் மிகவும் முக்கியமான ஒன்று. விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக விளையாடும் பார்ட்னெர்ஷிப் தான் போட்டியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருக்கும்.”

“யாராவது 70 ரன்கள் பார்ட்னெர்ஷிப் செய்திருந்தால், அதனை 110 அல்லது 120 ரன்களுக்கு கொண்டு சென்றிருக்க முடியும் அது தான் போட்டியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”