திரும்ப வந்துட்டேனு சொல்லு ..! பாகிஸ்தான் அணியை அலறவிட்ட இந்திய அணியின் முன்னணி வீரர் ; பா..! ஏன்னா அடி ;

0

ஆசிய கோப்பை : நேற்று இரவு 7:30 மணியளவில் நடந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் அமையவில்லை. இருப்பினும் தொடக்க வீரரான ரிஸ்வான் அதிகபட்சமாக 43 ரன்களை அடித்தார்.

ஆனால் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி இறுதி வரை விளையாடி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 147 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் ரிஸ்வான் 43, பாபர் அசாம் 10, ஜமான் 10, அஹமத் 28, ஷதாப் கான் 10, ஹரிஸ் ரவூப் 13 ரன்களை அடித்தனர்.

பின்பு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஆனால் போட்டி ஆரம்பித்த நேரத்தில் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் முதல் பதிலேயே ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் 50+ மேற்பட்ட ரன்களை பார்ட்னெர்ஷிப் செய்து அடித்தனர்.

ரவீந்திர ஜடேஜா, சூரியகுமார் யாதவ் , ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்களின் கூட்டு முயற்சியால் இறுதி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய. இதில் ரோஹித் சர்மா 12, விராட்கோலி 35, ரவீந்திர ஜடேஜா 35, ஹர்டிக் பாண்டிய 33, சூரியகுமார் யாதவ் 18 ரன்களை அடித்துள்ளனர்.

பாகிஸ்தான் அணியை அலறவிட்ட இந்திய வீரர் :

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ஹர்டிக் பாண்டிய சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பவுலிங்கில் 3 விக்கெட்டை கைப்பற்றிய ஹர்டிக் பாண்டிய பேட்டிங் எப்படி செய்ய போகிறார் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

அதனை நிறுவிக்கும் வகையில் 14.3 வது ஓவரில் களமிறங்கி விளையாடினார் ஹர்டிக் பாண்டிய. தொடக்கத்தில் தயக்கமாக விளையாட தொடங்கினாலும் பின்னர் போக போக அதிரடியாக விளையாட தொடங்கினார் ஹர்டிக் பாண்டிய. இறுதி ஒவரில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது இந்திய.

அப்பொழுது எதிர்பாராத வகையில் ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழந்தது ஹர்டிக் பாண்டியாவுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் மனதை தளரவிடாமல் நின்று விளையாடிய ஹர்டிக் பாண்டிய 19.4 ஓவரில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். பவுலிங் செய்து மூன்று விக்கெட்டையும், பேட்டிங் செய்து 33* ரன்களையும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதும் ஹர்டிக் பாண்டியாவிற்கு தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here