நாங்க இதை செய்ய நினைத்தோம் ; ஆனால் இந்திய வீரர் அதனை தடுத்துவிட்டார் ; பாபர் அசாம் பேட்டி ;

ஆசிய கோப்பைக்கான இரண்டாவது டி-20 போட்டிகள் நேற்று இரவு 7:30 மணியளவில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நாயகம் பாபர் அசாம் வெறும் 10 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனால் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி, ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த பாகிஸ்தான் அணியால் இறுதிவரை விளையாடி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 147 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் ரிஸ்வான் 43, அஹமத் 28, ஷதாப் கான் 10, ஹாரிஸ் ரவூப் 13 ரன்களை அதிதிகபட்சமாக அடித்துள்ளனர்.

பின்பு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. பாகிஸ்தான் அணியை போலவே தொடக்க ஆட்டம் இந்திய அணிக்கு மோசமாக அமைந்தது. ஏனென்றால் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் முதல் பந்தில் ஆட்டம் இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

ஏனென்றால் இந்த போட்டியில் ரிஷாப் பண்ட் போன்ற முன்னணி வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இருப்பினும் விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடிய காரணத்தால் 19.4 ஓவர் முடிவில் 148 ரன்களை அடித்தது இந்திய.

அதில் ரோஹித் சர்மா 12, விராட்கோலி 35, ரவீந்திர ஜடேஜா 35, சூரியகுமார் யாதவ் 18, ஹர்டிக் பாண்டிய 33 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்தியா அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு தோல்வியை குறித்து பேசிய பாபர் அசாம் கூறுகையில் ; “நாங்க தொடக்கத்தில் (பவுலிங்) சிறப்பாக தான் விளையாடினோம். எனக்கு தெரிந்து 15 ரன்கள் ஷாட் ஆனது.உண்மையிலும் பவுலர்கள் சிறப்பாக விளையாடி முடிந்தவரை ரன்களை கட்டுப்படுத்தினார்கள். அதிலும் இளம் வீரரான நசீம் ஷா சிறப்பாக பவுலிங் செய்து அவரது திறனை வெளிப்படுத்தினார்.”

“நாங்க பவுலிங் செய்ய தொடங்கிய போதே, நவாஸ் தான் இறுதி ஓவர் பவுலிங் செய்ய வேண்டுமென்று முடிவு செய்துவிட்டோம். ஆனால் இறுதி நேரத்தில் ஏற்பட்ட பதற்றம் குழப்பத்தை ஏற்படுத்தியது. நாங்க இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுக்க நினைத்தோம், ஆனால் அந்த நேரத்தில் ஹர்டிக் பாண்டிய சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.” என்று கூறியுள்ளார் பாபர் அசாம்.