பயிற்சியில் ஆட்டத்தில் சிக்ஸர் -ஐ வெளுத்து வாங்கிய இங்கிலாந்து வீரர் ; CSK அணியின் பலமே இவர் தான் ;

0

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

இதில் திரை நட்சத்திரங்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பி.சி.சி.ஐ. நிர்வாகிகள், ஐ.பி.எல். நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர். மே 28- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 16ஆவது ஐ.பி.எல்.

கிரிக்கெட் தொடரில் மொத்தம் 74 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், கவுகாத்தி, தர்மசாலா ஆகிய 11 நகரங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்க, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 10 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், காயங்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி வருவது, அணி நிர்வாகத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாற்று வீரரைத் தேர்வு செய்து வருகின்றனர் சம்மந்தப்பட்ட அணியின் நிர்வாகத்தினர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறவுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் மட்டும் 7 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான டிக்கெட் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது. இதனிடையே, கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீரர்களின் பயிற்சியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் அங்கு குவிந்து வீரர்களின் பயிற்சியை நேரில் கண்டு ஆரவாரம் செய்தனர். அப்போது, பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி, சிக்ஸர்களையும், ஃபோர்களையும் விளாசினார்.

இதைக் கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சத்தமிட்டு அவரை உற்சாகப்படுத்தினர். அதேபோல், பென் ஸ்டோக்ஸும் பேட்டிங் விளையாடிய நிலையில், ஃபோர் விளாசினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களின் பயிற்சி ஆட்டங்களை அணி நிர்வாகம் வீடியோவாகப் பதிவுச் செய்து, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here