சின்ன தல ரெய்னா ஐபிஎல் கேப்டன ?? சிஎஸ்கே அணி கிடையாது ; சோகத்தில் மூழ்கிய சென்னை ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

இரு வாரங்களுக்கு முன்பு தான் ஐபிஎல் 2021 போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் ஒரு முக்கியமான விஷயம் ஐபிஎல் ஆரம்பித்த நாள் முதல் இப்பொழுது வரை தோனியுடன் விளையாடி வருகிறார் சுரேஷ் ரெய்னா…!!

பிசிசிஐ , சில மாதங்களுக்கு முன்பு புதிதாக இரண்டு அணிகள் அறிமுகம் ஆக போவதாக கூறியுள்ளனர். அதேபோல, லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகள் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆகியுள்ளது. அதனால் மெகா ஏலம் நடைபெற போவதாக பிசிசிஐ அறிவித்தது. அதுமட்டுமின்றி, அதில் ஓவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று.

அப்படி பார்த்தால் சிஎஸ்கே அணியில் தோனி, ருதுராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் டுபலஸிஸ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் இடம்பெற வாய்ப்பு மிகவும் குறைவுதான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் புதிய இரு அணிகளில் யார் கேப்டன் என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது….!

அதில் சில வீரர்கள் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியானது…! அதில் சுரேஷ் ரெய்னா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் கேப்டனாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில் சுரேஷ் ரெய்னாவுக்கு தான் புதிய அணியில் கேப்டன் ஆக இருக்க…அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஏனென்றால் தோனியுடன் சுரேஷ் ரெய்னா விளையாடிய அனுபவம் என்பது மிகவும் அதிகம். அந்த அனுபவம் தான் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது….!!! ஆனால் லக்னோ ஆ ?? அல்லது அகமதாபாத் ஆ?? எந்த அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெற போகிறார் என்பது தெரியவில்லை…!

ஏன் சிஎஸ்கே அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேற்றப்பட்டார்…!!! என்ன காரணம் … !!!

இந்த ஆண்டு தொடக்கத்தில் சிறப்பாக விளையடினாலும் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சொல்லும் அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை. அப்பொழுது அவருக்கு (சுரேஷ் ரெய்னா) முதுகில் அடிப்பட்டுவிட்டது. அதனால் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்ப இடம்பெற்றார். முதல் இரு போட்டிகளில் ரன்களை அடிக்க தவறினாலும், Qualifier 1 மற்றும் இறுதி போட்டியில் முக்கியமான நேரத்தில் ரன்களை அடித்து கொடுத்துள்ளார் என்பது தான் உண்மை.

சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் விளையாட வேண்டுமா அல்லது புதிய அணியில் கேப்டனாக இருக்க வேண்டுமா ?? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!!!