பணத்துக்காக இதை செய்தவன் தான் நீ…!!! நீ பேசலாமா ?? ஹர்பஜன் சிங் ஆவேசம் ; யாரை பற்றி பேசியுள்ளார் தெரியுமா ??

2021ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

அதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. இதனால் சில கிரிக்கெட் ரசிகர்கள் இரு நாடுகளும் நட்பு தான், இது போட்டி மட்டும் தான் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் சில ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை கோவமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே, நேரத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகமது அமீர் ஆகிய இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதில் இந்திய அணியின் தோல்வியை பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார்…!

அதற்கு பதில் கொடுத்த ஹர்பஜன் சிங் ; ஆசியா கோப்பையில் அமீர் வீசிய பந்தை சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தேன் என்று பதிலடி கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். அதற்கு மீண்டும் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் வீசிய பந்தை தொடர்ந்து 4 சிக்ஸர் அடித்துள்ளதாக முகமது அமீர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதனை பார்த்து கோபத்தின் எல்லைக்கு சென்ற ஹர்பஜன் சிங் ; பணத்துக்காக கிரிக்கெட் விளையாட்டையே விற்றவன் நீ…! இதெல்லாம் நீ பேசவே கூடாது என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்…! கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் விட, இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை 31ஆம் தேதி அன்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளனர். அதில் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் முதல் இரண்டு இடத்தை கைப்பற்றும் வாய்ப்பு குறைந்துவிடும்…!!