ஒரே போட்டியில் விராட்கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் செய்த சாதனை ; ரசிகர்கள் உற்சாகம் ; சாதனையின் விவரம் இதோ ;

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஒரே போட்டியில் (தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டி) சாதனை செய்துள்ளனர்.

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டி-20 போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளனர். அதனை தொடர்ந்து இன்று இரவு 7 மணியளவில் தொடங்கிய இரண்டாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளனர்.

அதனால் வேறு வழியில்லாமல் டார்கெட் அதிகமாக வைக்க முடிவு செய்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். போட்டி தொடங்கிய முதல் பந்தில் இருந்து சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 237 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் கே.எல்.ராகுல் 57, ரோஹித் சர்மா 43, விராட்கோள் 49*, சூர்யகுமார் யாதவ் 61, தினேஷ் கார்த்திக் 17* ரன்களை அடித்துள்ளனர். அதனால் 238 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிது தென்னாபிரிக்கா அணி. இறுதி ஓவர் வரை போராடிய தென்னாபிரிக்கா அணி 221 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய.

விராட்கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் செய்த சாதனை :

கடந்த சில ஆண்டுகளாவே விராட்கோலியின் பேட்டிங் பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க விராட்கோலி கம்பேக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த சில போட்டிகளில் விராட்கோலி விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு நம்பிக்கை எழுந்துள்ளது தான் உண்மை.

அதேபோல தான் சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரன்கள் குவிந்து வருகிறது. முன்னணி வீரரான ரோஹித் சர்மா, விராட்கோலி விக்கெட்டை இழந்தாலும் சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி போட்டிகளில் வென்றுள்ளது.

இன்றைய போட்டியில் விளையாடிய விராட்கோலி 49* ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் வீரர்களின் விராட்கோலி தான் முதல் வீரர் 11,000* மேற்பட்ட ரன்களை அடித்து சாதனை செய்துள்ளார். அதேபோல சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் விளையாடி 1000*க்கு மேற்பட்ட ரன்களை டி-20சர்வதேச போட்டியில் அடித்து சாதனை செய்துள்ளார். இதனை சாதனையாக பார்ப்பதை விட இந்திய அணியின் பேட்டிங் லைன் வலுவாக மாறிக்கொண்டு வருகிறது தான் உண்மை.