இனிமேல் இவருக்கு வாய்ப்பு இல்லை ; இந்த தவறு தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

0

கவுகாத்தி: நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பவும தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் இரண்டாவது டி-20 போட்டியில் மோதின. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு 20 ஓவர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் அமைந்தது. தொடர்ந்து அதிரடியாகவே விளையாடியது இந்திய. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 237 ரன்களை அடித்துள்ளது இந்திய.

அதில் கே.எல்.ராகுல் 57, ரோஹித் சர்மா 43, விராட்கோலி 49*, சூர்யகுமார் யாதவ் 61, தினேஷ் கார்த்திக் 17 ரன்களை அதிதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 238 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி.

தொடக்க வீரர் கேப்டன் பவும மற்றும் ரோஸோவ் ஆகிய இருவரும் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். அதனால் தென்னாபிரிக்கா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், டி -காக் மற்றும் டேவிட் மில்லர் விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் தென்னாபிரிக்கா அணிக்கு ரன்கள் குவிந்தன.

டேவிட் மில்லரை எப்படியாவது விக்கெட்டை கைப்பற்ற இந்திய அணி அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்தது வீண் தான். அதுமட்டுமின்றி டேவிட் மில்லர் அடித்த அதிரடியான சாதமும் தென்னாபிரிக்கா அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. ஏனென்றால், இறுதி ஓவர் வரை விளையாடிய தென்னாபிரிக்கா அணி 3 விக்கெட்டை இழந்த நிலையில் 221 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வென்றது இந்திய. இதில் டி-காக் 69*, டேவிட் மில்லர் 106*, ஐடன் மார்க்ரம் 33 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி 2 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளதால் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; ” என்னவாக இருந்தாலும் ஒரு அணியாக விளையாட வேண்டுமென்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். எனக்கு தெரிந்து கடந்த 8 – 9 மாதங்களாக தனி தனி வீரர்கள் அவரவர் திறமையை வெளிப்படுத்திவருகின்றனர். அதனால் தான் இந்திய அணி போட்டிகளில் வென்று வருகின்றனர்.”

“அதுமட்டுமின்றி கடந்த 6 – 7 போட்டிகளில் டெத் ஓவர்களில் இந்திய அணியின் பவுலிங் மோசமான நிலையில் தான் இருக்கிறது. அதனை விரைவாக சரி செய்ய வேண்டும். டெத் ஓவரில் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்வதும் கடினம் தான். இனிவரும் போட்டிகளில் சூர்யகுமார் யதாவிற்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக அவர் (சூர்யா) 23ஆம் தேதி தான் விளையாட போகிறார் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here