இந்திய அணி இதை முன்பே செய்திருந்தால் நாங்க வெற்றி பெற்றிருப்போம் ; தெம்பா பவுமா ஓபன் டாக் ;

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது போட்டியின் சுருக்கம்:

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் தெம்பா பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார். அதனால் வேறு வழியில்லாமல் டார்கெட் நிர்ணயிக்க முடிவு செய்த இந்திய வீரர்கள் முதல் ஓவரில் இருந்து அதிரடியாக விளையாட தொடங்கினார்கள்.

இதில் கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் அரைசதம் அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி விராட்கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அதிகபட்சமாக 237 ரன்களை விளாசியது இந்திய அணி.

அதில் கே.எல்.ராகுல் 57, விராட்கோலி 49*, ரோஹித் சர்மா 43, சூர்யகுமார் யாதவ் 61, தினேஷ் கார்த்திக் 17 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 238 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி.

ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. ஏனென்றால் தொடக்கத்து மெதுவாக விளையாடி கொண்டு வந்த தென்னாபிரிக்கா அணிக்கு இறுதி நேரத்தில் ஓவர்கள் குறைவாக இருந்த காரணத்தால் தோல்வியை கைப்பற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆமாம், டேவிட் மில்லரின் அதிரடியான சதம் நிச்சியமாக இந்திய அணிக்கு பயத்தை ஏற்படுத்தியது.

இறுதி ஓவர் வரை போராடிய தென்னாபிரிக்கா அணி 221 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய. இதில் டேவிட் மில்லர் 106*, டி-காக் 69 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். டேவிட் மில்லர் அடித்த சதம் எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது.

தோல்வி குறித்து பேசிய தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறுகையில் :

“இன்றைய போட்டியில் நாங்க பவுலிங்கில் சரியாக விளையாடவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்கள் இருக்க வேண்டும். என்ன செயல்படுத்த போகிறோமோ, அதனை சரியாக செய்ய வேண்டும். பேட்டிங்-கில் நாங்க சிறப்பாக தான் விளையாடியுள்ளோம் (221). ஆனால் 240 ரன்கள் அடித்தது மிகவும் அதிகமான ரன்கள் தான்.”

“இன்றைய போட்டியில் டேவிட் மில்லர் எப்படிப்பட்ட உலகச்சிறந்த வீரர் என்பதை நிரூபித்துவிட்டார். அதுமட்டுமின்றி இந்திய வீரர்கள் முதலில் ஸ்விங் பவுலிங் செய்ததால் எங்களால் சரியாக பேட்டிங் செய்ய முடியாமல் தவித்தோம். ஆனால், அவர்களுக்கு (இந்திய பவுலர்) ஸ்விங் சரியாக வராத நிலையில் எங்கள் பேட்டிங் அதிரடியாக இருந்தது என்று கூறியுள்ளார் தெம்பா பவுமா.”