விராட்கோலி-க்கு நோ-பால் கொடுக்கப்பட்ட காரணம் என்ன ? போல்ட் ஆன பந்துக்கு ரன்கள் வழங்கப்பட்ட காரணமும் இதுதான் ; ஐசிசி விதிகள் இதுதான்

போட்டி 16: நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

போட்டியின் விவரம் :

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 159 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக மசூத் 52*, அகமத் 51, ஷாஹீன் அப்ரிடி 16 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

பின்பு 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால் கேப்டன் மற்றும் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் தலா 4 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணி இறுதி வரை போராடி 160 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது இந்திய கிரிக்கெட் அணி.

அதனால் குரூப் 2ன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது இந்திய. இதற்கிடையில், இந்த போட்டியின் இடைப்பட்ட நேரத்தில் விராட்கோலிக்கும் பாகிஸ்தான் பவுலர்களுக்கும் பல குழப்பங்கள் எழுந்தது. அதில் இறுதி ஓவரில் வீசப்பட்ட நோ பால் தான் முக்கியமான சர்ச்சையாக மாறியுள்ளது.

ஆமாம், விராட்கோலி அந்த பந்தை அடித்த பிறகு அது சிக்ஸர் ஆ ? அல்லது பவுண்டரி ஆ? என்று பார்த்துவிட்டு இரண்டாவது நாடுவார் நோ பால் என்று கூறினார். அதனால் பாகிஸ்தான் வீரர்களுக்கும் நடுவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு அது நோ பால் என்று முடிவிற்கு வந்தனர்.

ஆனால் இப்பொழுது அது தவறான முடிவு கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய அணிக்கு எதிராக பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உண்மையிலும் அது நோ-பால் தானா ? இல்லையா ? ஐசிசி விதிகள் என்ன சொல்கின்றன ? விராட்கோலி போல்ட் ஆன பிறகும் மூன்று ரன்களை அடித்தது சரிதானா ? இல்லையா ?

விளக்கம் : ஐசிசி கிரிக்கெட் விதிப்படி ; ஒரு பிரீஹிட் பந்தை கையால் தொட்டாலோ, களத்தில் இருக்கும் பீல்டர்களை தடுப்பது, ரன் -அவுட் போன்ற விஷயங்கள் நடந்தால் தான் விக்கெட் என்று அறிவிக்கப்படும். மற்றபடி அதனை ரன்-அவுட் என்று சொல்லவே முடியாது.

ஒரு பிரீஹிட்-ல் பேட்ஸ்மேன் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் அல்லது பந்து வீச்சாளரிடம் வந்தால் அதோட அவரால் ரன்கள் ஓட முடியாது அல்லது பவுண்டரி , சிக்ஸர் ஏதாவது அடித்தால் அந்த பந்து முடிவிற்கு வரும். இதனை தவிர்த்து பிரீஹிட் பந்தில் கேட்ச், போல்ட் அவுட் போன்ற விஷயங்கள் நடந்தால் நிச்சியமாக விக்கெட் இல்லை என்று கூறியுள்ளது விதிகள்.

சரியாக 19.4 நோ-பால் பிரீஹிட் பந்தில் விராட்கோலி போல்ட் அவுட் ஆனார். இருப்பினும் அது பிரீஹிட் என்று தெரிந்து கொண்ட விராட்கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஓடியே மூன்று ரன்களை அடித்து இந்திய அணிக்கு வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளனர். இதற்கும் பாகிஸ்தான் வீரர்கள் பலர் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.